கொரோனா லாக்டவுன்.. நெல்லையில் முதல் முறையாக தனிநபர் இடைவெளியுடன் திறந்தவெளி திரையரங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா லாக்டவுன் காலம் ஒட்டுமொத்த தேசத்தின் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டிருக்கிறது. ஆனால் இந்த லாக்டவுனில் மனித நேயம், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

பல நூறு, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் கூலி தொழிலாளர்களுக்கு உதவுவது, பிற மாநிலங்களில் திக்கு தெரியாமல் விழித்து உணவுக்கு தவிக்கும் சூழ்நிலையில் உதவுவது என எண்ணற்ற மனிதநேய செயல்களைப் பார்க்கிறோம்.

Nellai Corporations Open Theatre for Coroanvirus Camp

மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து கர்நாடகாவின் பெலகாவிக்கு குழந்தைக்கான மருந்தை சரக்கு ரயிலில் கொண்டு வந்து சேர்த்த ரயில்வே ஊழியர்களின் மதிப்பிடமுடியாத கருணையை பார்க்கிறோம். இந்த வகையில்தான் நெல்லையில் உதயமாகி உள்ளது தனிநபர் இடைவெளியுடன் திறந்தவெளி திரையரங்கு.

Nellai Corporations Open Theatre for Coroanvirus Camp

லாக்டவுன் காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. இவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

40 நாட்கள் லாக்டவுன் காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி உருவாக்கியதுதான் திறந்தவெளி திரையரங்கு.

Nellai Corporations Open Theatre for Coroanvirus Camp

அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இன்று திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

இவர்கள் ஆயிரத்தில் ஒருவன்கள்தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+