நூல் நூலா தொங்கிய மட்டன்.. நெல்லையில் பிரபல ஓட்டலில் பிரியாணியில் என்ன அது? ஆடிப்போன திருநெல்வேலி
சென்னை: மட்டன் கடைகள், சிக்கன் கடைகள், மீன் மார்க்கெட், அசைவ ஓட்டல்கள், நடை பாதை உணவகங்கள் என ஒன்றையும் விடாமல், உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், ஓட்டல்கள் சுகாதாரம் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் சில உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் பிறப்பிக்கும் விதிமுறைகளை கடைப்பதில்லை.. அதிலும் பிரபல ஓட்டல்களிலே இதுபோன்ற அஜாக்கிரதைகள் நடப்பது, உணவுப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.
சமீபகாலமாகவே, ஹோட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வெடித்தபடி உள்ளன.. எனவேதான், அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே அதிரடி ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொள்கிறார்கள்.

ஓட்டல்களில், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என்று புகார்கள் வரும்போதெல்லாம் விரைந்து சென்று சோதனையை நடத்துகிறார்கள்.
இறைச்சி, ஓட்டல்கள்
இதுபோன்ற புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.. கெட்டுப்போன இறைச்சிகள் வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்துக்கு வருவதாக தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட சுமார் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தது பெரும் அதிர்ச்சியை தமிழகத்துக்கு ஏற்படுத்தியிருந்தது.

வெட்டப்படும் ஆடுகள்
சமீபத்தில்கூட, எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில், ஆடுகள் வெட்டப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாக புகார் வரவும், உடனே மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என மொத்த பேரும் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தனர்..
அப்போது அங்கிருந்த ஒரு கடையில், ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். அத்துடன் அனுமதியில்லாத இடத்தில் வெட்டியதற்காகவும், சுகாதாரமாக வைக்காததற்காகவும், நல்ல முறையில் இருந்த 40 கிலோ ஆட்டு இறைச்சியையும் பறிமுதல் செய்திருந்தது நினைவிருக்கலாம்.
இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "தரமற்ற முறையில் உணவுகள் சமைத்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்படும். உணவுகளில் செயற்கையான நிறமிகளை சோ்க்கக்கூடாது. மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவுப்பாதுகாப்பு துறை
உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை முறைப்பட வேண்டும். இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் கடைகளின் முன்பு இறைச்சியைத் தொங்கவிடக்கூடாது. துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமாக இறைச்சியை தொங்கவிடலாம்.
இறைச்சிக்கடை பணியாளர்கள் கையுறை, தலையுறை, ஏப்ரான் உறை அணிந்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற தாள் கொண்டு இறைச்சியை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும்,
அதேபோல பொதுமக்களும் உணவகங்களில் சாப்பிடும்போது ஏதாவது கெட்டுப்போன உணவுகள் இருந்தால் உடனே உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.

நெல்லை மட்டன் பிரியாணி
எனினும் சில ஓட்டல்களில் இந்த அஜாக்ரதைகள் தொடர்கின்றன.. நேற்றுகூட நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. நெல்லையில் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. இந்த ஓட்டலில் சிலர் மட்டன் பிரியாணி வாங்கியிருக்கிறார்கள்.. சாப்பிட போகும் நேரத்தில் அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, ஓட்டல் நிர்வாகத்திடமும் வாக்குவாதம் செய்தனர்...
தட்டில் வைக்கப்பட்ட மட்டன் பிரியாணியை ஓட்டல் நிர்வாகத்திடம் காட்டி, இது என்ன? என்று வாடிக்கையாளர்கள் கேட்பதும், அதற்கு ஓட்டல் தரப்பில் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதும் வீடியோவாக வெளிவந்து, இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications