அரசியலில் என்னை அநாதையாக்கி விட்டார்கள்! நெல்லை கண்ணன் உருக்கம்! கண்ணீர் சிந்திய திருமா!
சென்னை: அரசியலில் சில அநாதைகளை நம்பி தாமும் அநாதையாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீருடன் உருக்கமாக பேசியிருக்கிறார் நெல்லை கண்ணன்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
நெல்லை கண்ணன் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பதால் அந்தக் கட்சியை தான் சூசகமாக சாடியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

விசிக விருது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் காங்கிரஸ்காரரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன், இரண்டாம் விடுதலை வாங்கிதந்த சிங்கம் நீங்கள் என ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

கண்ணீர் சிந்தி
மேலும், இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கூறிய நெல்லை கண்ணன், தன்னையறியாமல் கண்ணீர் சிந்தியதுடன் உங்களின் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை கருணாநிதி அழைத்ததாகவும் அப்போது தமது புத்திக்கு அது உரைக்கவில்லை எனவும் நெல்லை கண்ணன் மனம் திறந்து பேசினார்.

நரசிம்மராவ்
இதேபோல் திருமாவும், ஸ்டாலினும் தங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொண்ட அவர், கருணாநிதியை எதிர்த்து தன்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார் என்ற தகவலையும் நெல்லை கண்ணன் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு ஒலி நாடாவே வெளியிட்ட தாம், இன்று அரசியல் அநாதையாகிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

திருமா அழுகை
நெல்லை கண்ணன் கண்ணீர் சிந்துவதை பார்த்த திருமாவளவன், தாமும் கண்ணீர் வடித்தார். இதனால் அந்த இடமே உணர்ச்சிக்கரமாக மாறியது. இதனிடையே நெல்லை கண்ணன் ஒரு காலத்தில் திமுகவையும், கருணாநிதியை கடுமையாக சாடிப் பேசி அரசியல் செய்தவர் என்பது இங்கு திரும்பி பார்க்கத்தக்கது. திமுகவினர் பலரும் இதை சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்ட தவறவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications