Nellai Kavin: கவின் ஆணவக் கொலை.. ஒருதலைபட்சமாக நடக்கும் காவல்துறை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
சென்னை: நெல்லை கவின்குமார் ஆணவப் படுகொலை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடந்து வருவதாகக் கூறிய அவர், உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் - செல்வி ஆகியோரின் மகன் கவின்குமார். 26 வயதாகும் இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித் அரிவாளால் கவின்குமாரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராடி வந்தனர்.
இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கவின்குமார் பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ஸ்டாலின் தலைமையிலான ஃபெயிலியர் மாடல் ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. சாதிய மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கவின் என்ற மென்பொறியாளர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், ஸ்டாலின் மாடல் காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அறிந்து, ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடியா ஸ்டாலின் மாடல் அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications