ரஜினிகாந்த் ரெஸ்ட் எடுத்தாலும்.. ஓயாமல் உலா வரும் டிரோல்ஸ்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ரெஸ்ட் எடுத்தாலும் அவர் அரசியலுக்கு வராததை வைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக டிசம்பர் 3-ஆம் தேதி தெரிவித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 3 ஆண்டுகள் எதையும் செய்யாமல் இருந்ததால் அப்போதே நெட்டிசன்கள் வச்சு செய்தனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் 10 நாட்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திவிட்டனர். இதனால் அரசியலுக்கு வர போவதில்லை என அறிக்கை விட்டுவிட்டார். தற்போது அவர் பூரண ஓய்வில் இருப்பதாக தெரிகிறது. அவர் ஓய்வில் இருந்தாலும் அவரை விட்டு மீம்ஸ்களும் ட்ரோல்களும் ஓயாது போல!
மீடியாக்கள் தான்
இந்த ட்ரோலில் ரஜினியை வச்சு செய்துள்ளார்கள். அதாவது ரஜினி ஊடகங்கள் கூறியதால் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் என்றும் ரசிகர்கள் கூறியதால் அறிவித்தார் என்றும் குற்றம்சாட்டுகிறார். கடைசியில் இருவரும் சேர்ந்து நீங்கள்தானே சொன்னீர்கள் என ரஜினியை குற்றம்சாட்டுகிறார்கள்.
உசுப்பேத்திஉசுப்பேத்தியே
சும்மா இருந்த ரஜினியை உசுப்பேத்தி உசுப்பேத்தி இந்த நிலைக்கு ஆளாக்கிட்டானுங்க.. என்ற தலைப்பில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு சிறுவனை கபாலிடா என சொல்லுமாறு ஒருவர் கேட்கிறார். 1991, 1996, 2001, 2006, 2011, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் கபாலிடா என சப்தமாக சொல்லுமாறு கேட்கிறார். இறுதியில் அந்த சிறுவன் அழ ஆரம்பித்துவிடுவான்.
|
பாபா பாடல்
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற்ற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.. என்ற ரஜினியின் பாபா திரைப்படத்தில் வரும் சக்தி கொடு பாடல் ஒலிக்கிறது. அதில் சிவா மனசுல சக்தி படத்தில் ஊர்வசி, சந்தானம், ஜீவாவின் தங்கை ஜீவாவை கலாய்ப்பார்கள். அந்த சீனில் இந்த பாடலை யாரோ சிங்க் செய்துள்ளார்கள்.
இப்ப செய்றது என்ன?
ரசிகர்களை பலிகடா ஆக்கவிரும்பவில்லை. அப்போ இவ்ளோ வருஷம் செஞ்சதுக்கு பேர் என்ன? என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications