Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஏர்போர்ட்டிற்கு போனால் இனி கல்யாணமே பண்ணிக்கலாம்.. இதை பாருங்க.. அடடே இது புதுசா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் விமான நிலையத்தில் ஒரு வேற லெவல் சம்பவம் நடந்துள்ளது. இப்போது இணையம் முழுக்க அது குறித்தே பேச்சாக உள்ளது. நாமும் இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்போர்ட் என்பது பயணிகள் தங்கள் விமானங்களில் ஏறும் வரை காத்திருக்கும் ஒரு இடம்தான். ஆரம்பத்தில் ஏர்போர்ட்டின் பணி இதுவாக மட்டுமே இருந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல விமான நிலையத்தில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டது.

 Netizens Amazed to see Matrimony store at Chennai airport

விமான பயணம் என்பது இப்போதும் பலருக்கும் மன அழுத்தம் தரும் ஒன்றாகவே இருக்கிறது. அதில் இருந்து சற்று தப்ப விமான நிலையங்கள் நமக்கு ஒரு வாய்ப்பை தருகிறது.

ஏர்போர்ட்: ஆனால், அனைத்து விமான நிலையங்களும் நமது அழுத்தத்தைக் குறைக்கும் எனச் சொல்ல முடியாது. சில விமான நிலையங்களில் நாம் உள்ளே செல்வதே கூட பெரும் போராட்டமாக இருக்கும். அதை மாற்றி அனைவருக்கும் நல்ல ஒரு அனுபவத்தைத் தர வேண்டும் என்பதை மனதில் வைத்து இப்போது ஏர்போர்ட்டை வடிவமைத்து வருகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட பல விஷயங்களை நாம் இதில் உதாரணமாகச் சொல்ல முடியும்.

இந்தியாவிலும் கூட மத்திய அரசு விமான நிலையங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டில் விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலான காலங்கள் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. இதன் காரணமாகவே ஏர்போர்ட்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

சென்னை விமான நிலையம்: அதன்படி சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்பட்டது. சென்னை ஏர்போர்ட் சிறப்பாக இல்லை என்று பலரும் கூறி வந்த நிலையில், விமான நிலையம் மேம்படுத்தப்பட்டது. புதிதாக ஒருங்கிணைந்த முனையமும் கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஏர்போர்ட் வடிவமைக்கப்பட்டது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

 Netizens Amazed to see Matrimony store at Chennai airport

அதைத் தொடர்ந்து சில மாதங்களில் அனைத்து விமானங்களும் இந்த ஒருங்கிணைந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னை ஏர்போர்ட்டில் உள்ள ஒரு கடை குறித்த தகவல்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கல்யாணமே பண்ணிக்கலாம்: அதாவது விமான நிலைய வளாகத்திலேயே 'எலைட் மேட்ரிமோனி' என்ற ஒரு மேட்ரிமோனி நிறுவனம் கடை வைத்துள்ளது. இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், "சென்னை ஏர்போர்ட்டில் மருந்தகம் அல்லது அவசரமாகப் பொருட்களை வாங்கக் கடைகள் கூட இல்லை.. ஆனால், இங்கே பாருங்கள் என்ன இருக்கிறது என்று" என அவர் அங்குள்ள மேட்ரிமோனி கடையின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த போட்டோ இணையத்தில் உடனடியாக டிரெண்டானது. இதில் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். வழக்கமாக விமான நிலையத்தில் ஒருவர் லே ஓவர் என்றாலும் கூட அதிகபட்சம் சில மணி நேரம் தான் இருக்க முடியும். அதற்குள் வாழ்க்கைத் துணையைத் தேடிவிடலாம் என்று யார் நம்புவார்கள் எனப் புரியவில்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் மற்றொருவர் திருமணம் சொர்க்கத்தில் நடக்க வேண்டும் என விரும்புவோர்.. அதற்கு முன்பு விமான நிலையத்தில் பதிவு செய்வார்கள் போல எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+