என்னாது.. காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் படித்தாரா? சீமான் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: காமராஜர் கட்டிய பள்ளியில் படித்துதான் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்து பெரிய விஞ்ஞானியானார் என்று சீமான் பேசிய நிலையில், காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டே அப்துல் கலாம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார் என்று கூறி சீமானின் பேச்சை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
காமராஜரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அடுத்த பம்மலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது காமராஜர் கட்டிய பள்ளியில் படித்துதான் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்து பெரிய விஞ்ஞானியானார் என்று பேசினார். சீமான் பேசியதாவது:-

காமராஜர் பள்ளியில் அப்துல்கலாம் படித்தார்
மூதறிஞர் ராஜாஜி 6,000 பள்ளிகளை மூடினார்.. காசு இல்லை என்று கூறி அந்த பள்ளிகளை மூடினார். ஆனால் மூடிய அந்த 6,000 பள்ளிகளையும் திறந்து வைத்தவர் காமராஜர். அதற்கு மேலேயும் 14,000 பள்ளிகளை திறந்து நம்மளை எல்லாம் படிக்க வைத்தார். இங்கே மேடையில் இருப்பவர்களும் சரி.. நானும் சரி.. எல்லாருமே அவர் திறந்த பள்ளியில் தான் படித்தனர். அதை இல்லை என யாரும் மறுக்க முடியாது.
அப்துல்கலாம் வந்து படித்து அறிவியல் விஞ்ஞானியாகி, அனுகுண்டு கண்டுபிடித்து வெடித்து காண்பித்து, இந்திய வல்லாதிக்கம் பெற்ற நாடாக ஆகியதாக பெருமைப்பட வேண்டும் என்றால் அதற்கு காமராஜர் திறந்த பள்ளியினால் என்பதே.. அவர் பள்ளிக்கூடம் திறந்தது அவரது சாதிக்கு மட்டும் என்று இல்லையே.. இவ்வாறு அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சீமானின் பேச்சை விமர்சித்த நெட்டிசன்ஸ்
அதாவது, காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டே அப்துல் கலாம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார் என்றும், அப்படி இருக்கையில் காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் எப்படி படித்து இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சிலர் காமராஜர் காமராஜர் முதலமைச்சர் ஆனது 1954 ஆம் ஆண்டு என்றும், ஆனால் அப்துல் கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டு என்றும், எனவே இப்படி இருக்கும் போது 20 ஆண்டுகளாக அப்துல் கலாம் படிக்காமலா இருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படியே நெட்டிசன்கள் பலரும் சீமானின் பேச்சை விமர்சித்து வருகிறார்கள்.
காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுத அண்ணா
இதேபோல, காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுதது அண்ணா என்று சீமான் பேசியதும் பேசுபொருளானது. மு.க முத்து மறைவுக்கு அவரது சகோதரர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலினும் நானும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும் இருவருக்கும் இடையே இன்னும் உறவு நீடிக்கிறது. காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுதது அண்ணா என்பார்கள்" என்று பேசினார்.
முன்னாள் முதல்வர் அண்ணா கடந்த 1969 ஆம் ஆண்டு மறைந்த நிலையில், காமராஜர் இறந்தது 1975 ஆம் ஆண்டு அகும். காமராஜர் உயிரிழப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா மறைந்துவிட்ட நிலையில், அவர் எப்படி அழுது இருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். எந்த குறிப்பும் இன்றி எவ்வளவு நேரம் வேண்டும் ஆனாலும் பேசக்கூடிய ஆற்றல் கொண்ட சீமானிடம் இதை எதிர்பார்க்கவில்லை எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications