சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்? பொன்னாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை; சுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவும் பொறுப்பேற்க என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையாகி உள்ளது.

நிதி ஆயோக் சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த தமிழகம் 9-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கிறது.

Netizens slams Pon. Radhakrishnan

2017-18 ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில் இம்முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் இதை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்

மேலும் தமிழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனிடையே 50 ஆண்டுகளாகவே சுகாதாரத்துறையில் பினண்டைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. திமுக ஆட்சிக் காலங்களில் தமிழகம் சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்தது. 2015-16-ம் ஆண்டில் கூட சுகாதாரத்துறையில் 3-வது மாநிலமாக இருந்தது. அப்போதும் அதிமுக ஆட்சிதான்.

2017-18-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெற்றது, இப்போதும் அந்த கட்சியின் ஆட்சிதான். அப்படியான நிலையில் சுகாதாரத்துறையின் பின்னடைவுக்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதால் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

English summary
Netizens slammed that Former Union Minister Pon. Radhakrishnan's comments against against DMK on healthcare indices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X