Zoho ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது! கைவிரித்த ஸ்ரீதர் வேம்புவை விளாசும் நெட்டிசன்கள்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜோஹோ நிறுவனத்தில் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்வதை தடுக்க கடினமாக உழைத்து வருகிறோம். ஆனால் சாப்ட்வேர் துறை இருண்டதாகவே உள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான வழக்கமான சம்பள உயர்வு கிடையாது'' என்று ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் ஸ்ரீதர் வேம்புவை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

netizens-slams-sridhar-vembu-after-he-announces-no-salar-hike-for-zoho-employees

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். ஐடி துறை சார்ந்த பல்வேறு விவகாரங்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் 'ஏஐ' வருகையால் ஜோஹோ நிறுவனத்தின் நிலைமை மோசமாகிவிட்டது. இதனால் கொத்து கொத்தாக பணியாளர்களை வேலையை விட்டு அனுப்புவதை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இந்த ஆண்டு வழக்கம்போல் வழங்கப்படும் சம்பள உயர்வு கிடையாது என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''சாப்ட்வேர் துறையின் பிசினஸ் நிச்சயமற்றதாக உள்ளது. 'ஏஐ' செலவுகளை வியக்கும் வகையில் உயர்த்தி உள்ளது. A.டேட்டா மையங்களுக்கு தேவையான சர்வர்களின் விலை 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. B. ஏஐ பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் அதிக செலவுகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் புவிசார் அரசியல் (Geopolitical) பின்னணியும் உள்ளது. நாங்கள் மார்க்கெட்டிங்கிற்கான பட்ஜெட்டை தற்போது குறைத்துள்ளோம். அதேபோல் ஊழியர்களிடமும் வழக்கம்போல் வழங்கும் சம்பள உயர்வை இந்த முறை வழங்க முடியாது என்று கூறியுள்ளோம். இதை தவிர்க்க முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுள்ளேன்.

நிறுவனத்தில் Mass Layoffs தடுக்க கடினமாக உழைத்து வருகிறோம். ஆனால் சாப்ட்வேர் துறை இருண்டதாகவே உள்ளது. இதனால் கடந்த 18 மாதங்களாக நாங்கள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் நடப்பு சூழலை புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

நாங்கள் எங்களை புதுப்பித்து கொள்ளும் பணியில் இருக்கிறோம். எங்களின் இந்த பணி எப்படி செயல்பட்டுள்ளது என்பது அடுத்த 3-5 ஆண்டுகளில் தெரியவரும். எங்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்'' என கூறியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் இந்தியர்களை அங்கிருந்து உடனடியாக இந்தியா வாருங்கள். புதிய இந்தியாவை படைப்போம் என்று சில நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டு இருந்தார். ஆனால் தற்போது அவர் தனது நிறுவன ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனால் பலரும் கோபமாகி ஸ்ரீதர் வேம்புவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக 'ஆல்ட் நியூஸ்' நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் முகமது ஜூபேர், ''நீங்கள் தான் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பி வாருங்கள் என்று பதிவிட்டு இருந்தீர்கள். தற்போதைய வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கே ஜோஹோ நிறுவனம் போராடி வரும் வேளையில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவோருக்கு என்ன உறுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்?'' என கேள்வி எழுப்பி உள்ளார். பலரும் இந்த கருத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னொருவரோ, ''நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதா? இல்லை.. லாபத்தின் அளவு குறைந்துள்ளது அவ்வளவு தான். சம்பள உயர்வு கேட்காதீர்கள். இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என சொல்வது போல் உங்களின் பதிவு உள்ளது. இது சரியானது இல்லை என்பது என்னுடைய கருத்து'' எனக்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+