சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 வருடம்.. 20 நபர்கள்.. 200 பெண்கள்.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா.. தமிழிசை மீது மக்கள் கோபாவேசம்

தமிழிசை சவுந்தராஜனுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி விவகாரம் பற்றி வாய் திறக்காத தமிழிசை- வீடியோ

    சென்னை: "7 வருடம்.. 20 நபர்கள்.. 200 பெண்கள்.. என்னக்கா நடக்குது இந்த நாட்டில், கற்பழித்தவர்களுக்கு எதிரா எப்பக்கா குரல் குடுப்பீங்க?" என்று நெட்டிசன்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    தமிழக பெண் அரசியல்வாதிகளில் மிகவும் முக்கியமானவர் தமிழிசை சவுந்தராஜன். சுவாதி படுகொலையாகட்டும், ஹாசினி கொடூரமாகட்டும், ஆத்தூர் சிறுமியின் வன்புணர்வு கொலையாகட்டும்.. அங்கு முதல் ஆளாக சென்று அந்த குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்தவர் தமிழிசைதான்!

    ஆனால் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும், பொள்ளாச்சி சம்பவம் இன்று விஸ்வரூபமெடுத்துள்ளது.

    பெண்ணின் கண்ணீர் கேட்கவில்லையா.. எல்லாரையும் கைது பண்ணுங்க.. பெரிதாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பெண்ணின் கண்ணீர் கேட்கவில்லையா.. எல்லாரையும் கைது பண்ணுங்க.. பெரிதாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு!

    அதிமுக தொடர்பு

    அதிமுக தொடர்பு

    சம்பந்தப்பட்ட குற்றவாளி கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் பிரபலம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நெட்டிசன்களின் ஆத்திரம் இப்போது தமிழிசை பக்கம் திரும்பி உள்ளது.

    கூட்டணி ஏன் வைத்தீர்கள்?

    கூட்டணி ஏன் வைத்தீர்கள்?

    "திமுக தமிழை எங்க வளர்த்தாங்க... அதுக்கு பதிலாக கனிமொழியைதானே வளர்த்தாங்க?" என்று தமிழிசை நேற்றுமுன்தினம் கருத்து தெரிவித்திருந்தார். இதை மட்டும் சொல்ல தெரிந்த தமிழிசைக்கு, சம்பவம் நடந்து 20 நாட்களுக்கும் மேலாகியும் இதுகுறித்து எந்த வித கருத்தையும் சொல்லாமல் இருப்பதால்தான் இந்த கோபமே! போயும் போயும் அந்த கட்சியுடன் போய் கூட்டணி வைத்தீர்களே என்று கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

    அக்கா.. ஏன் வாய் திறக்கல?

    அக்கா....அதுலாம் இருக்கட்டும்...பொள்ளாச்சி அதிமுக காம கொடூரர்களை அரெஸ்ட் பண்ண வலியுறுத்த போறீங்களா இல்லையா? பொள்ளாச்சியில எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது. இந்த விஷயத்த பத்தி நீங்கள் ஏன் வாய் திறக்கல" என்று ஒரு கமெண்ட்

    தாமரை எப்படி மலரும்?

    "பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட #இந்து பெண்களை கற்பழித்தவர்களுக்கு எதிராக எப்பக்கா குரல் குடுப்பீங்க" என்று உரிமை கலந்த பாசத்துடன் கேட்கிறது இன்னொரு ட்வீட். "இதையெல்லாம் கண்டுகாம இருக்கிங்க அப்பறம் எப்படி தாமரை மலரும்" என்று ஆதங்கத்துடன் பதிவிடுகிறது ஒரு ட்வீட்.

    ஏன் மவுனம்?

    "இந்துப் பெண்களை நாசப்படுத்திய நபர்களுக்கு எதிராக பேசாமல், அவர்களுக்குத் துணைபோகும் பாஜகவின் மதச்சாயம் வெளுத்தது, இந்துக்களை மற்ற மதத்தவரோடு மோதவிட்டு ஓட்டு பெறுவது மட்டுமே பாஜக குறிக்கோள், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்துக்கள் இல்லையா, ஏன் இந்த மவுனம்,பாஜகவும் உடந்தையா?" என்று வெறுப்புடன் பதிவிடப்பட்டுள்ளது மற்றொரு ட்வீட்.

    காரசார ட்வீட்

    "அக்கா பொள்ளாச்சி பிரச்சனைய கையில் எடுங்க.." என்று உரிமையுடன் அழைக்கிறது ஒரு ட்வீட். "7 வருடம்.. 20 நபர்கள்.. 200 பெண்கள்.. மிரட்டி கோடிக்கணக்கான பணம்.. ஆளும் கட்சியின் காம வெறி கூட்டம்.. என்ன நடக்குது இந்த கேடுகெட்ட ஆட்சியில்" என்று உச்சக்கட்ட கோபத்தில் வந்து தெறித்து விழுகிறது ஒரு காரசார ட்வீட்

    English summary
    Netizens slams Tamizhisai Soundarajan over Pollachi Rape Case issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X