கருக்கா வினோத் ஜாமீன் விசாரணை..தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஆஜரானாரா? இல்லையா? வெடித்தது புது சர்ச்சை!
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடி கருக்கா வினோத் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை; அதனால் கருக்கா வினோத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசி கைதானவர்தான் ரவுடி கருக்கா வினோத். இவர்தான் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் சர்தார் பட்டேல் சாலையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி கைதானவர். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் Aravindakshan B R தமது எக்ஸ் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 தேதி நள்ளிரவு 1.30 க்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. CCTV காட்சிகளை கொண்டு விரிவான ஆய்வு செய்த போலீஸார், வினோத் (எ) கருக்கா வினோத்தை கைது செய்தனர். கடந்த 15 மாதங்களாக புழல் சிறையில் இருந்த கருக்கா வினோத் 18-07-23 அன்று ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்.
கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவனுக்காக கருணையோடு ஆஜராகிய
— Aravindakshan B R (@RealAravind36) October 26, 2023
பிஜேபி வழக்கறிஞர்
=============================கடந்த 2022 ம் ஆண்டு
பிப்ரவரி மாதம் 10 தேதி நள்ளிரவு 1.30 க்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது..
CCTV காட்சிகளை கொண்டு… pic.twitter.com/xl4fX9oYmX
அந்த மனு 19-07-23 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அரசுத் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் ஒருவரும் ஆஜராகாத காரணத்தால், "கருக்கா வினோத்திற்கு" அன்றே நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைக்கிறது. பிஜேபி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வினோத்திற்கு ஆஜராகிய வழக்கறிஞரின் பெயர் P.முத்தமிழ் செல்வகுமார்; திருவாரூர் மாவட்ட பிஜேபியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்; 20-07-23 ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கருக்கா வினோத் 98 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்..அதாவது, சொந்த கட்சி அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவனை, அரசுத் தரப்பு வழக்கறிஞரோடு செட்டிங் போட்டுக் கொண்டு அவரை ஆஜராகாமல், பார்த்துக்கொண்டு வினோத்தை ஜாமீனில் எடுத்துள்ளார் வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார். தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடும் ஒரு குற்றவாளி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்கிறான். ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம். எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டிய வழக்கு. ஆனால் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வினோத் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த வழக்கு எண் http://Crl.MP No-17247 /2023 விசாரணைக்கு வந்த போது அரசுத்தரப்பில், அரசு வழக்கறிஞர் ஒருவரும் ஆஜராகவும் இல்லை. எதிர்ப்பை பதிவு செய்ய யாருமே இல்லை என்கிறது நீதிமன்ற பதிவுகள். இவ்வாறு Aravindakshan B R பதிவு செய்திருந்தார்.

இதனை திமுகவின் செய்தித் தொடர்பாளரான சரவணன் அண்ணாதுரை உடனடியாக திட்டவட்டமாக மறுத்து ஆதாரங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பது தவறான கருத்து. ஆஜராகி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என ஆதாரங்களை இணைத்துள்ளார்.

இதற்கு Aravindakshan B R மற்றொரு பதிவில், கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில் ஆஜாராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கூறி எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால், E-Courts இணையதளத்தில் அப்படி யாரும் ஆஜரானதாக குறிப்பிடப்படவில்லை என மீண்டும் பதிவிட்டுள்ளார். இது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.













Click it and Unblock the Notifications