பூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் ஏன்? வீரமணி கருத்தால் மீண்டும் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
மழை வேண்டி கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விவாதப் பொருளானது. அதை கி. வீரமணி விமர்சிக்க, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பூஜையால் மழை வரும் எனில் வானிலை ஆய்வு மையம் ஏன் என்று கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் கி. வீரமணி பிற மத மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற எதிர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.,












Click it and Unblock the Notifications