வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - கோவை,நீலகிரியில் இடி மின்னலுடன் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி மாவட்டம்,ஈரோடு, சேலம்,திருவள்ளூர், ராணிப்பேட்டை,செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் தென்மேற்குப்பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வெயிலும் சுட்டெரித்து வருகிறது.
    இதனிடையே தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி மாவட்டம் ,ஈரோடு, சேலம் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    New Depression in the Bay of Bengal - Heavy rains in Coimbatore and Nilgiris

    இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்பட வட மாநிலங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    டெல்லியில் பருவமழை அதிதீவிரமாகப் பெய்து வருகிறது. மழை பெய்து வருகிறது. விடாது கொட்டி வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. விமான நிலையமே நீச்சல் குளம் போல தேங்கியுள்ளது. இந்த நிலையில், டெல்லியின் பல பகுதிகளில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    New Depression in the Bay of Bengal - Heavy rains in Coimbatore and Nilgiris

    தமிழகத்தில் ஆலோசனை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனையில், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+