டாப்பில் யார் இருக்காங்க? லிஸ்ட் எடுங்க.. புது டிஜிபி சங்கர் ஆரம்பமே அதிரடி.. அப்படியே அதிருதே
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாட்டில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறாராம்.
தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவாலை தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பதவி ஏற்றுக்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் ஆரம்பமே அதிரடியாக செயல்பட தொடங்கி உள்ளார். அதன்படி காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார். அதேபோல் சென்னையில் காவல்துறையில் செய்யப்பட்ட புரட்சிகள் தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்லப்படும் என்றும் கூறி உள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க ரவுடிகளின் லிஸ்டை கேட்டு உள்ளாராம். தொடர் கொலை குற்றங்களை செய்த ரவுடிகள், அதன்பின் ஒரு குற்றங்களை செய்து வெளியே சுற்றி வரும் ரவுடிகள், போலீஸ் கண்ணில் மண்ணை தூவி சுற்றி வரும் ரவுடிகள், கொலை இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களை செய்யும் ரவுடிகள் என்று 4 பிரிவாக ரவுடிகளை பிரிக்க டிஜிபி சங்கர் உத்தரவிட்டு உள்ளாராம்.
இவர்களை லிஸ்ட் எடுத்து அதில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் என்ற லிஸ்டை காவல் நிலையத்திற்கு அனுப்பும்படி உத்தரவிட்டு உள்ளாராம். இந்த லிஸ்டு படி மாவட்டங்களில் டாப்பில் இருக்கும் ரவுடிகளை பிடிக்க அவர் உத்தரவிட உள்ளாராம். ரவுடியிசத்தை ஒழிக்கும் விதமாக, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த உத்தரவை பிறப்பிக்க சங்கர் ஜிவால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராய கும்பல்களை தடுப்போம். அவர்களை கைது செய்வோம் ரவுடிகளை கைது செய்வோம். இதை தடுப்பதே முதல் நோக்கம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராய கும்பல்களை தடுப்போம் என்று டிஜிபி சங்கர் கூறியுள்ளார்.
யார் இவர்?: 1990 பேட்ச் அதிகாரியான ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.
2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார். ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.
உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக ஓரம்கட்டப்ப சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் சீனிற்கு வந்தார். அதன்பின்தான் இவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக பதவி ஏற்றுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications