நிலம், மனை, கட்டுமான திட்டங்களை பதிவு செய்ய இ-சேவை வசதி.. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி
சென்னை: மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அதற்காக கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.
ரியல் எஸ்டேட் சட்டப்படி, 5,381 சதுரடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவு நிலத்திலான கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளை, இதற்கான ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்பதால், நேரடியாக பதிவு செய்து வந்தனர். ஆனால், இந்த பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன... எனவே, இதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மனைப்பிரிவு: இதுகுறித்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலர் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. அதில், "மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை பதிவு செய்யவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் இ-சேவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு உதவிக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மனைப்பிரிவை பொறுத்தவரை 20 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது 2 ஹெக்டேர் வரை ஒரு திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம், 2 ஹெக்டேருக்கும் அதிகமாக இருந்தால் ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
100 வீடுகள்: கட்டிடங்களை பொறுத்தவரை 20 வீடுகள் வரையிலான திட்டத்துக்கு ரூ.10 ஆயிரமும், 21 முதல் 50 வீடுகள் வரை ரூ.15 ஆயிரமும், 51 முதல் 100 வீடுகள் வரை ரூ.10 ஆயிரமும், 100 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
வர்த்தக கட்டிடங்களாக இருந்தால், தரைப்பகுதியில் 1000 சதுரமீட்டர் வரை திட்டம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், 1001 முதல் 5 ஆயிரம் சதுர மீட்டர் என்றால் ரூ.15 ஆயிரமும், 5001 முதல் 10 ஆயிரம் சதுர மீட்டர் என்றால் ரூ.20 ஆயிரமும், 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் ரூ.25 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும். திட்டம் கலவையாக இருந்தால் அவற்றுக்குரிய கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
கட்டண வசதி: இந்த கட்டணத்தை, ஆன்லைன் மூலமோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமாகவோ செலுத்தலாம். இந்த வசதியானது ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். விண்ணப்பங்களுடன் ஆவணங்களை நகல்களாக வழங்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications