அடுத்த இன்னிங்ஸ்.. வங்கக்கடலில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி- தமிழ்நாட்டில் எங்கு மழை பெய்யும்?
சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கி வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை இந்த முறை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. அதேபோல் ஒரு வழிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தாழ்வு மண்டலமும் கடுமையான கனமழையை தமிழ்நாட்டிற்கு கொடுத்தது.

தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய தாழ்வு பகுதி என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வடகிழக்கு பருவக்காற்று வேகமாக வீசும். காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றிலிருந்து தென் மாவட்டங்களில் மழை தீவிரம் எடுக்கும். இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்கள் அதிக அளவு மழையை இதனால் பெறும்.

காற்று
இன்று முதல் வரும் 20ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேதம்
கடந்த மாதம் முழுக்க பெய்த மழையால் வடமாவட்டங்கள் அதிகம் பாதித்தன. ஆனால் அந்த அளவிற்கு இந்த முறை வடமாவட்டங்கள் பாதிக்காது, மாறாக இந்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications