சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருக்கும் ஏர்போர்ட்களில் பயணிக்கவே ஆள் இல்லை.. இப்போ எதற்கு பரந்தூரில் புதிய ஏர்போர்ட்? சீமான் கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் உள்ளதால் விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் உள்ளது.

இதன் காரணமாக பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

டெல்லி விமான நிலையத்துக்குள் தோட்டா.. ஆசிரியருக்கு வித்தியாசமான தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடிடெல்லி விமான நிலையத்துக்குள் தோட்டா.. ஆசிரியருக்கு வித்தியாசமான தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி

சீமான்

சீமான்

இதனிடையே நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக திமுக அரசைத் தொடர்ந்து சாடி வருகிறார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அண்ணன்மார்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று செங்கொடி தனது உயிரைக் கொடுத்துள்ளார். தனது உடலுக்குத் தீயிட்டு ஒரு புரட்சித் தீயை அவர் இந்த மண்ணில் பற்ற வைத்துள்ளார்.

 ஏழு தமிழர்கள் விடுதலை

ஏழு தமிழர்கள் விடுதலை

ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பது 30 ஆண்டுகளா தொடர்ந்து சட்ட போராட்டம். நீண்ட நெடிய அரசியல் போராட்டத்திற்குப் பின் பேரறிவாளன் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த வேண்டியது இங்குள்ள ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளின் கடமையாகும்.

திமுக

திமுக

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுகிறது. ஆனால், ஆளுங்கட்சியாக ஆன பின்னர் செய்யும் செயல்கள் அதற்கு நேர் மாறாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் எதிர்ப்பதையே இப்போது ஆட்சியில் செயல்படுத்துகிறார்கள். எட்டு வழிச் சாலை விவகாரத்தில் திமுக அரசு அந்தத் திட்டத்தை எங்கு எதிர்த்தோம் என திமுக அமைச்சர் பேசுகிறார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பையே எதிர்த்து அறிக்கை வெளியிட்டு இருந்ததை அமைச்சர் மறந்துவிட்டார் போல!

 பெயர் மாற்றினால் போதுமா

பெயர் மாற்றினால் போதுமா

எட்டு வழிச் சாலை என்ற அதைப் பெயரைப் பயன்படுத்த முடியாது என்பதற்காக அதை "பயண தூரக் குறைப்பு சாலை" என்று பெயர் மாற்றி உள்ளனர். கேட்டால் 2035இல் 10 கோடி பேர் பயணம் செய்வார்கள் என்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். இப்படிப் பேசுவது சரியானது இல்லை. மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் பெங்களூர், ஹைதராபாத் மாநிலங்கள் வளர்ந்து விட்டதா?

 வளரவில்லை

வளரவில்லை

மருத்துவம், கல்வி போன்றவற்றில் அந்த நகரங்கள் வளர்ந்து விட்டதா? விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கூடுவதாகச் சொல்வது எல்லாம் நாட்டின் வளர்ச்சியா? இன்று நீங்கள் விலை நிலத்தில் விமான நிலையத்தைக் கட்டிவிடலாம். ஆனால், தேவைப்படுகிறது என்பதற்காக விமான நிலையங்களை நமக்குத் தேவையான நேரத்தில் எல்லாம் விலை நிலமாக மாற்ற முடியாது.

 விமான நிலையங்கள்

விமான நிலையங்கள்

இப்போது நாட்டில் இருக்கும் விமான நிலையங்களுக்குச் சென்று பாருங்கள். இருக்கும் விமான நிலையத்தில் பயணிக்கவே ஆள் இல்லை" என்று கடுமையாகச் சாடிய பேசினார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் தருவோருக்கு 3.5 மடங்கு இழப்பீடு, நிலம் உள்ளிட்டவற்றை வழங்குவதாக அரசு அறிவித்த போதிலும், அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
NTK chief Seeman latest press meet about new Parandur airport: (பரந்தூர் விமான நிலையம் கடுமையாகச் சாடிய நாம் தமிழர் சீமான்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X