வரும் 28ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம்.. மது விலக்கு கோரி அறப்போராட்டம்.. அடித்து ஆடும் திருமா
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் வரும் 28 ஆம் தேதி கருப்பு தினமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்கும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்கனவே கிளம்பியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. நாட்டின் குடியரசு தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன. இந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நடைபெறும் 28 ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கருப்பு தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொல் திருமாவளவன் கூறுகையில், " விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே 28 ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து துக்க தினமாக அனுசரிப்போம். முழுமையான மது விலக்கு கோரி ஜூன் 2 வது வாரத்தில் அறப்போராட்டம் நடைபெறும். மக்கள் நலனுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடவும் தயார்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications