சென்னைக்கு வரும் செலவை விட.. சிட்டிக்குள்ள போற செலவு அதிகம்.. கிளாம்பாக்கத்தை வைத்து நடக்கும் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ள நிலையில், இந்த பேருந்து நிலையத்தை வைத்து மிகப்பெரிய கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது.

கிளாம்பாக்கத்தை தாண்டி அரசு எஸ்இடிசி பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நகருக்கு உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. சிட்டி உள்ளே செல்வதற்கு பல்வேறு வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மினி பேருந்துகள், நகர பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை நகரத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. ரூ. 10ல் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கே பேருந்துகள் உள்ளன. அதிகாலையே இந்த பேருந்துகளில் பலரும் சிட்டி உள்ளே வந்தனர்.

New scam by Auto and taxis using Kilaampakkam Bus Stand

அதே சமயம் கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. இதற்கு நடந்தும், மினி பேருந்திலும் கூட செல்லலாம். இதிலும் 7 மணிக்கு பிறகு சிலர் சென்று பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்னும் சிலர் ஆட்டோ, காரில் செல்கின்றனர். ஆனால் இதை வைத்து பெரிய அளவில் கொள்ளை நடக்கிறது. இதில் காரில் செல்ல 2000 வரை, ஆட்டோவில் செல்ல 1000 வரை வாங்கப்பட்டது. சென்னைக்கு திருச்சியில் இருந்து வரவே குறைந்தபட்ச டிக்கெட் ரூ. 400தான். ஆனால் கிளாம்பாக்கத்தில் இருந்து சிட்டி உள்ளே வர ரூ. 1000 வரை கூட ஆட்டோவில் வாங்கப்படுகிறது.

தனியார் கார்களில் 2000 ரூபாய் கேட்கப்படுகிறது. சென்னைக்கு வரும் செலவை விட.. சிட்டிக்குள்ள போற செலவு அதிகம் என்று சொல்லும் அளவிற்கு கட்டணம் கடுமையாக உள்ளது. கிளாம்பாக்கத்தை வைத்து புதிய கொள்ளை நடக்க தொடங்கி உள்ளது.

கட்டுப்பாடு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியாரின் புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கடுமையான விதிகள்: சென்னைக்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் நேற்று மாலையில் இருந்து அனுமதிக்கப்படுவது இல்லை. அதேபோல் நேற்று மாலையில் இருந்து ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டுமே.. கோயம்பேடு, சின்னமலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக ஈசிஆர் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இவை மட்டுமே கோயம்பேடில் இருந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி செங்கல்பட்டு, பெருங்களத்தூர் ரூட் எடுக்கும் வாகனங்கள் எல்லாம் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள, இறக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இறக்கி விடப்பட்டனர்: நேற்று மாலையில் இருந்து இந்த விதிமுறை அமலில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+