விசிக அலுவலகத்திற்கு சோபா ஏன் வந்தது? காரணம் இதுதான்! திருமாவளவன் சொன்ன விளக்கம்!
சென்னை: தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவு எடுக்கும் நிலையில் விசிக இருந்தபோது, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புதியதாக சோபா வந்திருந்தது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் இது குறித்து திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனவே விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் விஜய் கூட்டணிக்கு அணுகியிருந்தார்.

இந்த கூட்டணி குறித்து முடிவை விசிக எடுக்க இருந்த நேரத்தில், விசிக அலுவலகத்திற்கு புதியதாக சோபா ஒன்று வந்தது. இது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட சோபாதான் தற்போது வந்திருக்கிறது என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "நாங்கள் தவெக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க தாமதமானது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியிருந்தார்கள். தவெகவுடன் பேரம் பேசத்தான் இந்த தாமதம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருந்தார். ஆனால் இடதுசாரிகள் கட்சிகள் எடுக்கிற முடிவை ஒட்டி, எங்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் விவாதித்து முடிவெடுப்போம் என்று சொல்லியிருந்தேன். அதல் எந்த தடுமாற்றமும் எங்களுக்கு இல்லை.
எனவே, அவர்கள் முடிவெடுத்து எங்களுக்கு சொன்னதை நாங்கள் எங்கள் உயர்நிலை குழுவில் விவாதித்திருந்தோம். எனவேதான் தாமதம் ஏற்பட்டிருந்தது.
சோபா விவகாரத்தை பொறுத்தவரை, நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம். அது வந்தபோது அதே நேரத்தில் செய்தியாளர்களும் வந்திருந்தார்கள். எனவே இது எதிர்பாராத நிகழ்வுதான்.
அதேபோல என்னை முதலமைச்சராக அமர வைக்க முயன்றதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் அதைப்பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியிருந்தார். முன்னதாக அதமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், திருமாவளவனை முதலமைச்சராக அமரவைக்க முயற்சிகள் நடந்ததாகவும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!











Click it and Unblock the Notifications