சிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்
வாக்குமூலத்தில் பல தகவல்களை சொல்லி வருகிறான் சுரேஷ்
Recommended Video
சென்னை: "நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்போம்.. கடைகளை நோட்டமிடுவோம்.. ஒரு மாசத்துக்கு அப்பறம் சிசிடிவி பதிவு எல்லாம் தானா அழிஞ்சிடும் தெரியுமா" என்று போலீசாரையே திகைத்து வைத்து கொண்டிருக்கிறார்கள் கொள்ளையன் முருகனும், சுரேஷூம்!
லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில், நாட்கள் கடந்து கொண்டே இருந்த நிலையில், மூளையாக இருந்த முருகனையும், உடன் செயல்பட்ட சுரேஷையும் போலீசார் பிடிக்கவே முடியவில்லை.
ஆனால், சுரேஷின் அம்மா, தம்பி என குடும்பத்தாரை விசாரணை வளையத்துக்குள் நம் போலீசார் கொண்டு வருவார்கள் என்று முருகனும், சுரேஷும் எதிர்பார்க்கவே இல்லை.

சரண்
அதனால்தான் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை தினமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி சுரேஷிடம் வெளிவந்த கூடுதல் தகவல்கள்தான் இவை:

சிசிடிவி
"கொள்ளையடிக்கும் இடத்தை முதலில் முடிவு செய்துவிடுவோம். அப்பறம் கஸ்டமர்களை போல உள்ளே கடைக்குள்ளே போவோம். அப்படியே ஒரு நோட்டமிடுவோம்.. திரும்ப ஒரு மாசத்துக்கு அந்த பக்கம் போக மாட்டோம்.. ஏன்னா, எங்க முகம், அங்க இருக்கிற சிசிடிவி கேமராவில் பதிந்திருந்தால் நாங்க மாட்டிப்போம்.

ஹாலிவுட்
பொதுவாக, சிசிடிவி கேமராவில் ஒரு மாசத்துக்கு அப்பறம் பதிஞ்சு போனது எல்லாமே தானா அழிஞ்சிடும். அதனால்தான் ஒரு மாசத்துக்கு நோட்டம் போட்ட கடை பக்கம் போக மாட்டோம். நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்துவிடுவோம். எங்க அடையாளத்தை மறைக்கதான், மிக்கி மவுஸ் மாஸ்க், கிளவுஸ் இப்படி போட்டுக்கிட்டு கொள்ளை அடிச்சது எல்லாமே ஹாலிவுட் படங்களை பார்த்துதான்.

கயிறு சிக்னல்
செல்போன் பயன்படுத்தினால் டிரேஸ் செய்துவிடுவார்கள்.. அதனால் வாக்கி டாக்கி யூஸ் பண்ணினோம்.. அப்பறம் அதையும் கண்டுபிடிச்சிடுவாங்கன்னு கயிறு டெக்னிக் யூஸ் பண்ணினோம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு சிக்னல் தந்து கொள்ளை அடித்தோம்.

மிஷின்கள்
முதலில் இடுப்பை கயிற்றை கட்டி, உள்ளே நுழைவது முருகன்தான்.. வெளியில் இருந்து கயிறு மூலமாக சிக்னல் கிடைத்து கொண்டே இருக்கும். சுவர்களை ஓட்டை போடுவதில் முருகன் கில்லாடி. ஆனால் சுவரை உடைக்க ஹைடெக் மிஷினைதான் பயன்படுத்துவோம்" என்கிறான் சுரேஷ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications