தமிழகத்தில் சி.ஏ.ஏ.வை ஆதரிக்கும் வட இந்தியர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் வடவர் எதிர்ப்பு முழக்கம்!
சென்னை: தமிழகத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் சி.ஏ.ஏ. ஆதரவு ஊர்வலங்களில் வட இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்றிருப்பது புதிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை முதல் கன்னியாகுமரி வரை பல நாட்களாக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஒரே ஒரு ஷாகின் பாக்தான்... தமிழகத்தின் ஒவ்வொரு நகரமும் ஷாகின் பாக் என்பதாக உருமாறி வருகிறது.
இந்த போராட்டங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று போலீசாரை தமிழக பாஜகவினர் மிரட்டி வருகின்றனர். இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இந்துக்கள் களமிறங்குவார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தூண்டிவிட்டு வருகிறார்.

எச். ராஜாவின் வன்முறை பேச்சு
ஆகையால் டெல்லி கபில் மிஸ்ராவைப் போல வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக தமிழகத்தின் பல நகரங்களில் ஊர்வலங்களையும் பேரணியும் நடத்தியது. இப்பேரணிகளில் தமிழகத்தில் வாழும் வட இந்தியர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

தலையெடுக்கும் வட இந்தியர்கள்
பாஜக ஆதரவு என்ற அடிப்படையில் அவர்கள் கலந்து கொண்டதில் பிரச்சனை எதுவும் உருவாகவில்லை .ஆனால் டெல்லி எரிந்தது போல் சென்னையும் எரியும் என்று எச்சரிக்கை விடுத்த பதாகைகளை வெறித்தனத்துடன் முழக்கமிட்டிருந்தனர் வட இந்தியர்கள். இதேபோல் பல இடங்களிலும் பாஜக ஆதரவு பேரணிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் வட இந்தியர்கள் திரண்டுள்ளனர்.

வட இந்தியர் எதிர்ப்பு போராட்டம்
இதனால் வட இந்தியர்களுக்கு எதிரான முழக்கங்கள் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வடவர் எதிர்ப்பு, பனியாக்கள் எதிர்ப்பு, மார்வாடிகள் எதிர்ப்பு என பல கட்ட போராட்டங்கள் தந்தை பெரியார் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அமைதிவழியில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக இந்த மண்ணின் மக்கள் போராடுகிறார்கள்.

அமைப்புகள் எச்சரிக்கை
அப்படியான நிலையில் போராடுகிற இந்த மண்ணின் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் வட இந்தியர்கள் முழக்கம் எழுப்பியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவர் எதிர்ப்பு பிரசாரத்தையும் போராட்டங்களையும் மீண்டும் முன்னெடுக்க நேரிடும் என்று திராவிடர் இயக்கங்களும் தமிழர் அமைப்புகளும் ஒருசேர எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications