Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜிதா தூக்க மாத்திரை சாப்பிட்டதற்கு புஸ்ஸி ஆனந்த் பேச்சுதான் காரணமாம்! அப்படி என்ன பேசிட்டாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், விஜய் பதவி கொடுக்காததால்தான் தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என கூறப்பட்டிருந்த வேளையில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அஜிதா குறித்து புஸ்ஸி ஆனந்த் பேசிய பேச்சுதான் என்கிறார்கள். அப்படி தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு புஸ்ஸி ஆனந்த், அஜிதாவை என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல். பி.எட் பட்டதாரியான இவர் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வரும் போதிலிருந்தே மக்கள் பணிகளை செய்து வருகிறார்.

vijay ajitha agnel bussy anand

நீண்டகாலமாக இருந்து வரும் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. இதனால் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, அங்கு வந்த விஜய்யின் காரை வழிமறித்தார்.

சமாதானம் பேசிய நிர்வாகிகள்

இது பெரும் பரபரப்பை கிளப்பியது. விஜய்யின் காரை வழிமறித்ததன் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொண்ட அவரை நிர்வாகிகள் சமாதானம் செய்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனராம்.

மன உளைச்சல்

இந்த நிலையில் 3 தினங்களாக மன உளைச்சலில் இருந்த அஜிதா, திடீரென 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பதவி கிடைக்காமல் அஜிதா தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களோ, "அஜிதாவை திமுக கைக்கூலி என பலர் விமர்சித்ததால் அக்கா மனம் உடைஞ்சி போய்ட்டாங்க. அதனால்தான் தற்கொலை முயற்சி செய்துட்டாங்க" என தெரிவித்திருந்தனர்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்

அரசியல்ன்னு வந்துட்டா யாராவது இப்படித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள், இதையெல்லாம் பார்த்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் ஆளுநர் தமிழிசை, திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ வானதி உள்ளிட்டோரெல்லாம் மக்கள் சேவைக்கு கிடைத்திருப்பார்களா? என்றெல்லாம் சிலர் அஜிதா செய்த தவறை சுட்டிக் காட்டினர். எனினும் அஜிதாவுக்கு ஒரு சிறு நம்பிக்கை துளிர்ந்திருந்ததாம், எப்படியும் நமக்கு பதவி கிடைத்துவிடும் என்று!

அஜிதா தற்கொலை முயற்சி

இதனிடையே அஜிதா தற்கொலை முயற்சிக்கு புஸ்ஸி ஆனந்த் பேச்சுதான் காரணம்னு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் சிலரிடம் ஒன் இந்தியா சார்பாக கேட்ட போது, அதற்கு அவர்கள் முதலில் அதெல்லாம் கிடையாது என சொல்ல தயங்கியவர்கள், பின்னர் பேசினர்.

நடந்தது என்ன

அவர்கள் கூறுகையில், "அந்த அஜிதா போராட்டம் நடத்தின செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை கூறினார். விஜய் கூடும் கூட்டங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விஜய்யை பார்த்தால் எப்படி செயல்பட வேண்டும், திமுக அரசை ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அண்ணன் பேசிகிட்டு இருந்தாரு.

காரை வழிமறித்துவிட்டாங்க

திடீர்னு அஜிதா விஷயத்தையும் அவர் பேசினாரு! விஜய்யோட காரையே அந்த பொண்ணு வழிமறித்துவிட்டாங்க. இனி கட்சியில் அந்த பெண்ணுக்கு எந்த ஒரு பதவியும் கிடைக்கவே கிடைக்காது. அதனால் நிர்வாகிகள் எல்லாம் அந்த பொண்ணு மாதிரி போராட்டம் செய்தால் நினைத்ததை சாதிக்கலாம் என நினைச்சுடாதீங்க, அப்புறம் ஒரு பதவி கூட கிடைக்காது" என சொல்லவிட்டதாக அந்த ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் அஜிதா தர்ணா செய்த போதும் கூட, நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றப்ப, புஸ்ஸி ஆனந்த் பின்வாசல் வழியாக வெளியேறிவிட்டார்.

விரக்தியடைந்த அஜிதா

புஸ்ஸி ஆனந்தின் பேச்சு, அதிலும் இனி பதவியே கிடைக்காது என்ற அந்த வார்த்தைகள் எல்லாம் அஜிதாவின் காதுகளுக்கு சென்றதாம். ஏற்கெனவே மனம் உடைந்திருந்தாலும் சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால் புஸ்ஸி ஆனந்த் பதவியே கிடைக்காது என தன் பெயரை குறிப்பிட்டு சொன்னதை அறிந்ததும் இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பதவியே கிடைக்காது என பொதுச் செயலாளரே சொல்லிவிட்டாரே என்பது அஜிதாவை காயப்படுத்தியதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+