6 - 12 மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வுதான்.. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புது அப்டேட்
சென்னை: தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வினாத்தாளை வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் திறப்பில் கால தாமதம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கியதை அடுத்து நடப்பாண்டுதான் பள்ளிகள் கடந்த ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டு முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. வழக்கமாக ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications