கஜாவை விடுங்க.. வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் வரும் 18ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று காலை 11.45 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது: கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திண்டுக்கல் அருகே நிலை கொண்டு உள்ளது.
இதன் காரணமாக, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் 24 மணி நேரங்களில் கன அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இம்மாவட்டங்களில், காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும்.
[புயல் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்]

காற்றழுத்த தாழ்வு பகுதி
தற்போதைய நிலவரப்படி தெற்கு மத்திய வங்க கடல் பகுதியில் நவம்பர் 18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். பின்னர் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு அது நகரும். 18ம் தேதி தெற்கு கடல் பகுதிக்கும், 20ம் தேதிவரை தென் மேற்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று மீனவர்கள் செல்லலாம்
அதேநேரம், கஜா புயலால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்லலாம் என்று பாலச்சந்திரன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

சபரிமலையில் மழை
கஜா புயல் வலு குறைந்துவிட்டதால், அது மெல்ல நகர்ந்து கேரளா வழியாக, அரபிக்கடலை சென்றடைய உள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் சபரிமலையில் கன மழை பெய்து வருகிறது.

மழை குறைவு
அரபிக்கடலில் கஜா சென்று சேர நாளை வரை நேரம் பிடிக்கும். அதன்பிறகு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் பற்றாக்குறை நிலையில்தான் உள்ளது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மழையை கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications