வட சென்னைக்கே விடிவு தந்த யானை கவுனி மேம்பாலம்... தெற்கு ரயில்வேக்கு மிகப்பெரிய நல்ல செய்தி
சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜாமுத்தையா சாலையை (நேரு ஸ்டேடியத்தை) இணைக்கும் யானை கவுனி மேம்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார்.
520 மீ நீளம், 20 மீ அகலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பழைய ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜமுத்தையா சாலையை (நேரு ஸ்டேடியம் அருகில்) இந்த மேம்பாலம் இணைக்கிறது.

சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் இருந்த யானைகவுனி மேம்பாலம் மிகவும் பழமையானது. இது ஒரு கட்டத்தில் மிகவும் பழுதடைந்தது. இதையடுத்து கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில். கடந்த 2016ல் இந்த பாதை முற்றிலுமாக மூடப்பட்டது.
இந்த பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. உண்மையில் இந்த பாதையில் பாலத்தை இடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சென்ன சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரயில் சேவையை குறைந்தது 72 மணி நேரம் நிறுத்தி வைத்தே ஆகே வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2020 ஆண்டு ஊரடங்கு அமலில் இருந்தது. அதைப் பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு பழமையான இந்த பாலத்தை இடித்து அகற்றினார்கள்.
இதனிடையே புதிய பாலம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. சென்னையின் மிக முக்கியமான ரயில்வே வழித்தடமான சென்ட்ரலை இணைக்கும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளை பாதிக்காத வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஏற்கனவே இருந்த 50 மீட்டர் நீள பாலத்துக்கு பதிலாக, 43.77 கோடி ரூபாய் செலவில் 156 மீட்டர் நீளத்துக்கு யானை கவுனி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. தூண்கள் இல்லாமல் இரும்பு காரிடா்கள் கொண்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடந்தது. எனினும் இந்த பாதை மொத்த வடசென்னைக்குமட்டுமின்றி தெற்கு ரயில்வேக்கும் மிக முக்கியமானது என்பதால் புரசைவாக்கம் பகுதியில் மிக கவனமாகவும், அதேநேரம் விரைவாகவும் அமைக்கும் பணி நடந்தது.

இதனிடையே யானை கவுனி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அலுவலா்களுடன் மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று கடந்த மாதம் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்படியே பணிகள் முடிந்து தற்போது யானைகவுனி மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார்.
யானை கவுனி மேம்பாலம் திறப்பு காரணமாக , இனி ரயில்கள் தாமதமாவது குறையும், கூடுதல் ரயில்களையும் இயக்க முடியும். மேலும் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications