Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக் ஸ்டண்ட் இல்லை! அசம்பாவிதம் இல்லை! போலீஸ் ஸ்மார்ட் பிளான்.. அமைதியாக நடந்த நியூ இயர் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே பீச்கள் அனைத்தும் வெறிச்சோடின.

மக்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே கோலாகலமாகப் பிறந்தது 2024 புத்தாண்டு. நள்ளிரவில் சாலைகளில் குவிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மக்கள் உற்சாகம்அடைந்தனர் . கோயில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

New year 2024 celebration: Chennai police handled the situation in a very neat manner

கட்டுப்பாடுகள்: அதே சமயம் சென்னையில் எல்லா வருடமும் செய்யப்படும் பைக் ஸ்டண்டுகள் இந்த முறை நடக்கவில்லை. போலீசார் சிறப்பாக திட்டமிட்டு பீச் செல்லும் சாலைகளில் பேரிகேட் போட்டு வாகன ஓட்டிகளை சோதனை செய்த பின்பே அனுப்பினர் . முக்கியமாக பைக்கில் செல்லும் நபர்களை நன்றாக சோதனை செய்த பின்பே அனுப்பினர். இதனால் சாலை விபத்துகள் தடுக்கப்பட்டன.

சாலைகளில் முக்கிய இடங்களில் பேரிகேட் போடப்பட்டு இருந்தது. போலீசார் தற்காலிகமாக டென்ட் போட்டு இருந்தனர். இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது தடுக்கப்பட்டு விபத்துகளும் தடுக்கப்பட்டன.

பீச்கள்: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே பீச்கள் அனைத்தும் வெறிச்சோடின. இரவில் போலீசார் அனுமதி மறுப்பு காரணமாக - பீச்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருவான்மியூர், பெசன்ட் நகர், மெரினா பீச்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின. அதே சமயம் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

நேற்று இரவு முதலே சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பா் 31 ஆம் தேதி மாலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் செய்யப்பட்டது.

காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு செய்யப்பட்டது.

பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.

அடையாறில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சாலை, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, ஆா்.கே.மடம் சாலை, மயிலாப்பூா் லஸ் காா்னா் வழியாக இலக்கை அடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரைவிளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து ராஜாஜி சாலை, வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் அன்று இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+