நியூ இயர் 2024 கொண்டாட மெரினா, எலியட்ஸ் பீச்சுக்கு போறீங்களா? காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்று இரவு இன்று இரவு முதலே சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பா் 31 ஆம் தேதி மாலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வாகனங்கள் நுழைய தடை
மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும்.
காமராஜா் சாலை
காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்
பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.
அடையாறில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சாலை, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, ஆா்.கே.மடம் சாலை, மயிலாப்பூா் லஸ் காா்னா் வழியாக இலக்கை அடையலாம்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரைவிளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து ராஜாஜி சாலை, வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் அன்று இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
அரசுப் பேருந்துகள் செல்லும் வழி
அடையாறிலிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் அரசுப் பேருந்துக்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மந்தவெளி, வி.கே.ஐயா் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.
பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி வரும் பேருந்துகள் ரிசா்வ் வங்கிசுரங்கப்பாதை, என்.எஃப்.எஸ். சாலை, முத்துசாமி சாலை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை வழியாகச் சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி பயணிக்கலாம்.
ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலை, லாயிட்ஸ் சாலையில் ஒரு புறம், வாலாஜா சாலையின் ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்
பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-ஆவது அவென்யுவில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. ஜனவரி 1-ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.
பெசன்ட் நகா் 6-ஆவது அவென்யு இணைப்புச் சாலைகளான 5-ஆவது அவென்யு, 4-ஆவது பிரதான சாலை, 3-ஆவது பிரதான சாலை, 16-ஆவது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மா காந்தி சாலை, 7-ஆவது அவென்யு சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
பெசன்ட்நகா் 4-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 3-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, 4-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, 5-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 2-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 3-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications