கடைசியில் ரஜினியையே "சாய்த்து" விட்டாரே .. பிடிவாதமாக நின்று .. நினைத்ததை சாதித்த தமிழருவி மணியன்!
சென்னை: யார் என்ன சொன்னாலும் சரி.. யார் எவ்வளவு தன்னை விமர்சித்தாலும் சரி... விடாமல் ரஜினியை அனத்தி எடுத்து அரசியலுக்கு வர வைத்து விட்டார் தமிழருவி மணியன்.. இந்த வருடம் நியூஸ் மேக்கர் வரிசையில் தமிழருவி மணியனும் பிரதான இடத்தை பெற்றுள்ளார்.
தமிழருவி மணியன் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தவர்.. காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்.. பிறகு ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.. இதை தொடர்ந்து, லோக்சக்தி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் டிராக் மாறி சென்றனர்.
இறுதியில் 2009-ல் 'காந்திய மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தை தொடங்கி, அதையே அரசியல் கட்சியாக மாற்றி, 2014 எம்பி தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்.. 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டவர்.. கொஞ்ச காலம் ஒதுங்கியே இருந்தவர், திடீரென ரஜினியுடனான தன்னுடைய நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டவர்.
ஏசிக்குள் வந்த புசு புசு சத்தம் சத்தம்.. அலறிய ரஞ்சித் குமார், வெலவெலத்த பூந்தமல்லி

முதல்வர்
எங்கே பேட்டி தந்தாலும் சரி, எந்த டிவி விவாதம் என்றாலும் சரி, ரஜினிக்காக மூச்சை பிடித்துகொண்டு ஆக்ரோஷமாக பேசியவர்.. ரஜினி அரசியல் கட்சியே ஆரம்பிக்க ஐடியாவே இல்லாத நிலையிலும், அதை பற்றி விடாமல் பேசி கொண்டிருந்தவர் தமிழருவி மணியன்தான்... முதல்வராக நீங்கள்தான வர வேண்டும் என்று உசுப்பேத்திக் கொண்டே இருந்தவர்.. திடீரென போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை, ஆலோசனை நடத்துவார்.. எதற்காக இவர் ரஜினி வீட்டுக்கு செல்கிறார் என்று தெரியாது.. ஆனால் ஒவ்வொருமுறையும் இவர் போயஸ் கார்டன் செல்லும்போதெல்லாம் அரசியல் களம் பரபரப்பாகிவிடும்.

வியப்பு
கடந்த ஒருமாதமாகவே தமிழருவி மணியன் பெயர் சோஷியல் மீடியாவில் பிரதானமாக அடிபட்டு வருகிறது.. இப்போது ரஜினியின் புதிய கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரஜினி கட்சி தொடங்குவாரா இல்லையா என்று செய்தியாளர் கேட்டால், அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வார்.. அதேபோல, ரஜினி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கேட்டால், அதையும் ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வார்.. இந்நிலையில் தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகி உள்ளது, பல தரப்பினரிடையே வியப்பை தந்து வருகிறது.

மேற்பார்வையாளர்
ஆனால், இந்த மேற்பார்வையாளர் என்ற பொறுப்பு எந்த கட்சியிலும் இல்லாத ஒன்றாகும்.. தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று பொறுப்பு சீமான் கட்சியில் மட்டும் இருக்கிறதே தவிர, இந்த மேற்பார்வையாளர் என்ற பொறுப்பு இதுவரை நாம் கேள்விப்படாத பொறுப்பாகும்.. இதன் பணி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விரிவாக்கம் செய்யும் போதும், புதிய பதவிகள் வழங்கும் போதும் கட்சிக்குள் ஏற்படும் மனஸ்தாபம், சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்குவதாம்.

விமர்சனம்
இப்படி தமிழருவி மணியனுக்கு பொறுப்பை தந்ததுமே ஒரு குரூப் அவருக்கு எதிராக கிளம்பி உள்ளது.. அதாவது ரஜினி குறித்து முந்தைய காலங்களில் அவர் பேசிய வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.. அந்த வீடியோவில் ரஜினியை சரமாரியாக தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார்.

வீடியோ
இப்படி ஒருவீடியோ வெளியானது கண்டு அதிர்ந்து போன தமிருவி மணியனோ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "ரஜினிகாந்தை ஒரு நடிகராக மட்டுமே நான் பார்த்த போது அவரை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறேன்... அப்போது அனைத்து நடிகர்கள் குறித்தும் நான் விமர்சித்திருக்கிறேன். ரஜினிகாந்தை அருகில் வந்து பார்க்கும் போது பற்றற்றவராக, சுயநலம் சாராதவராக இருப்பதை பார்த்து எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன்... ராஜாஜியை அண்ணாவும், கருணாநிதியும் செய்யாத விமர்சனமா, அவர்கள்தான் பின்னர் அவரை மூதறிஞர் என்றனர்" என்று சமாளித்து பேட்டி தந்து வருகிறார்.

முக்கிய இடம்
ஆக... அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று ஒவ்வொரு முறையும் ரஜினியே தயங்கி தயங்கி இருந்த நிலையில், விடாப்பிடியாக இருந்து ரஜினியை சமாதானம் செய்து, பேசி பேசியே கரைய வைத்துவிட்டார் தமிழருவி மணியன்.. இனி காந்திய மக்கள் இயக்கமும் ரஜினி கட்சியுடன் இணைந்துவிடும் என்றாலும், இந்த வருடம் மறக்க முடியாத நபராக தமிழருவி மணியன் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டார்.