மொத்தம் 4 நாள்.. பொளந்து கட்டும் வெயிலை.. ஓட ஓட விரட்ட போகுது மழை.. வானிலை மையம் அதிரடி

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொத்தம் 4 நாட்களுக்கு மழை இருக்க போகிறதாம்.. இந்த ஜில் அறிவிப்பை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது.. இந்த வெப்பத்தின் தாக்கம் போன மாசத்தில் இருந்தே தமிழகத்தில் அதிகமாகியும் விட்டது..

பல மாவட்டங்களில் மண்டையை கொளுத்தும் வெயில் அடிப்பதால், மதியானம் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.. அதிலும் இந்த மாதத்தின் துவக்கத்தின் தாக்கம் சென்ற மாதத்தைவிட அதிகமாகி உள்ளது.

சாரல்

சாரல்

இப்படி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.. அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது... அந்த வகையில், கடந்த வாரம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் 4 நாட்கள் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 மிதமான மழை

மிதமான மழை

அதன்படியே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

 வெப்பச்சலனம்

வெப்பச்சலனம்

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இரண்டு தினங்களுக்கு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் அதாவது நேற்றும் இன்றும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2 தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

 வளிமண்டல சுழற்சி

வளிமண்டல சுழற்சி

இந்நிலையில், மறுபடியும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது... மராட்டியம் - தமிழகம் இடையிலும், தென்கிழக்கு அரபிக் கடற்பகுதியிலும் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது என்றும், இந்த வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அறிவிப்பு

அறிவிப்பு

அதன்படி, தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும், குறிப்பாக, ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

 வானிலை

வானிலை

இன்று முதல், ஏப்ரல் 17 முதல் 19 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அத்துடன் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளது. நாளை முதல் தொடர்ந்து மொத்தம் 4 நாட்கள் மழை என்பதால், மக்கள் குதூகலமடைந்துள்ளனர்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+