ஹவாலா பணம்! தமிழகம் உள்பட 7 மாநிலங்களில்.. 17 இடங்களில்.. என்ஐஏ ரெய்டால் பரபரப்பு!
சென்னை: தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. முதலில் சிலிண்டர் வெடிப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் குண்டுவெடிப்புதான் என உறுதியானது. அதிலும் மாஸ்க், மஃப்ளர் அணிந்த நபர் அங்கு வந்து ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு பார்சலை அந்த ஹோட்டலின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வைத்துவிட்டு சென்றார்.
அது ஒரு மணி நேரம் கழித்து வெடித்தது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரை தேடும் பணிகள் நடக்கின்றன. ஆயினும் இதுநாள் வரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். மேலும் சென்னை, ராமேஸ்வரம் உள்பட தமிழகத்தின் 4 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூர் சிறையில் உள்ள தீவிரவாதியின் வங்கிக் கணக்கிற்கு ரூ 1 லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நஷீர், சிறை கைதிகளை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஏழுகிணறு பகுதியில் ஒரகு வீட்டில் பதுங்கி இருந்த 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் பிடித்து சென்றனர்.பெங்களூர் சிறை கைதிகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு தொடர்பாக 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications