சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. அதிகாலையில் அதிர்ந்த தலைநகரம்
சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனயில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் சென்னையில் வில்லிவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல கடலூர், திருச்சியில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக கொரட்டூரில் உள்ள குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி, விருதுநகர் உள்பட 3 இடங்களில் சுத்துப்போட்ட என்ஐஏ அதிகாரிகள்.. அதிரடி சோதனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications