என்னுடைய கண்ணீர் சீமானை நிம்மதியா இருக்க விடாது.. நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஆவேசமாக வீடியோ
சென்னை: சாட்டை துரைமுருகன் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்ட நிலையில், என்னுடைய கண்ணீர் நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் நிம்மதியாக இருக்க விடாது என்று விஜயலட்சுமி விமர்சித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நிர்வாகிகளோடு தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றனரா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

திருச்சி சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீடு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சாட்டை துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில், வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், வரும் 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் துரைமுருகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர்.
வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி: இதேபோல விஷ்ணு, இசை மதிவாணனையும் வருகிற 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி சீமானை விமர்சித்து மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-
என்ஐஏ யாரை விசாரிக்க வேண்டும்: இன்றைக்கு என்ஐஏ யாரை தெரியுமா விசாரிக்க வேண்டும்.. 2008 ஆம் ஆண்டில் இருந்தே சீமான் கூடவே இருந்துக்கிட்டு, எல்லா அயோக்கிய வேலையையும் செஞ்சுக்கிட்டு, சீமானையே பாக்கெட்டில் வச்சிருக்கிறேன் என்று ஆடிக்கொண்டிருக்கிறாரே மதுரை செல்வம் என்ற செல்வபாண்டி என்பவரை தான் என்ஐஏ விசாரிக்க வேண்டும். வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டு வேலைக்கு மதுரையில் இருந்து செல்வபாண்டியை கூட்டிட்டு வந்தார் சீமான்.
இந்த செல்வபாண்டி எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக அபாண்டமாக என் மேலே ஒரு பழியை போட்டு எல்லார் கிட்டயும் பரப்பினார். இன்றைக்கு இவர் மேலே ஒரு குற்றச்சாட்டு வந்ததும் அப்டியே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இந்த விசாரணையை தடுக்க தெரியுதாம்.. 5 ஆம் தேதி நானே போறேன் நீதிமன்றத்திற்கு அப்பிடினு போக தெரியுதாம். அப்போ எனக்கும் இப்படி தானே இருந்திருக்கும்.
சீமானுக்கு யோக்கியதை இல்லை: இவங்க 2 பேரும் எப்பிடி வந்தாங்க. எங்க அக்காவுக்கு ட்ரீட்மண்ட்க்கு உதவுகிறேன் என்று பூனை மாதிரி உள்ளே வந்துவிட்டு. ஒரு கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக டார்ச்சர் செய்தார்களே.. அப்போ நான் கதறினேனே.. என்னிடம் நேரடியாக பேசுறதுக்கு கூட சீமானுக்கு யோக்கியதை இல்லை. ஒன்னுமே தெரியாத மாதிரி என்னை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பினாரே அதற்குதான் இன்னைக்கு இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கு.
என் கண்ணீர் சும்மா விடாது: மாநில அரசு உங்கள காப்பாத்திக்கிட்டு இருக்குது.. காவல்துறை உங்களை காப்பாத்திட்டு இருக்குது.. ஏன் மத்திய அரசு கூட உங்கள காப்பாத்தலாம், ஆனால், என்னுடைய கண்ணீர் இருக்குல்ல. அது சீமானையோ.. நாம் தமிழர் கட்சியையோ நிம்மதியாக இருக்க விடாது. இவ்வாறு விஜயலட்சுமி வீடியோவில் பேசியுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications