கவரைப்பேட்டை ரயில் விபத்து: சதிவேலையால் 95 இணைப்பு கம்பிகள் அகற்றமா? என்.ஐ. ஏ. விசாரணையால் பகீர்!
சென்னை: தமிழ்நாட்டின் சென்னை அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது ஆகியவற்றின் பின்னணியில் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் ஆந்திரா மாநிலம் கூடுரை நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்று முன்தினம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ரயில் பெட்டிகள் சிதறிக் கிடந்த அலங்கோலம் பார்ப்பவர் நெஞ்சை திடுக்கிட வைக்கும்.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 1700 பயணிகள் பயணித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து சிதறிக்கிடந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் ரயில் விபத்தைப் போல நிகழ்ந்த கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-ன் அதிகாரிகளும் நேற்று விசாரணையைத் தொடங்கினர். மனித தவறுகளால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் சதிவேலைகள், நாசவேலைகள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் களமிறக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில் சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து சென்றுள்ளனர். கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications