இரவு விருந்துக்கு ஹோட்டலில் நண்பர்களோடு போன பெண்.. ரூமுக்கு வந்த போலீஸ்! பால்கனியில் பாவம் அந்த பெண்
சென்னை: பெங்களூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இதோ இப்போதும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது தெரியுமா?
கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்காக அவர்கள் முன்கூட்டியே அந்த ஓட்டலில் 3 ரூம்களை புக் செய்திருந்தனர்.. ஏற்கனவே திட்டமிட்டபடியே அனைவருமே அன்றைய தினம் விருந்துக்கு ஓட்டலுக்கு சென்றார்கள்.. அனைவரும் ஓட்டலில் தங்களுக்கான ரூம்களில் தங்கினார்கள்..
ஹோட்டல் ரூமில் இளம்பெண்
அப்போது நண்பர்கள் ஒன்றாக கூடி ஜாலியாக பேசிக்கொண்டும், பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக் கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, அதிக சத்தத்துடன் பாட்டை போட்டு ஆடியிருக்கிறார்கள். இந்த சத்தம் காரணமாக பக்கத்தில் தங்கியிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் HAL போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்கள்..
அவர்கள் இளம்பெண், அவரது நண்பர்கள் தங்கியிருந்த ரூமுக்கு சென்று விசாரணை நடத்தினர். விருந்துக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பிய போலீசார், அங்கிருந்த இளைஞர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் தரவில்லை என்றால் கைது செய்வோம் என்றும் போலீசார் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
ஏடிஎம் பணம் - ஜிபே
போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட நண்பர்கள் பயந்துபோனார்கள்.. தற்போது கையில் அவ்வளவு பணம் இல்லை, பிறகு பணம் எடுத்து, ஜிபே மூலம் அனுப்பி வைப்பதாக சொல்லி உள்ளனர்..
ஆனால் போலீசார் அதை மறுத்து, பணத்தை ரொக்கமாகவே கொடுக்க வேண்டும், அதுவும் இப்போதே தர வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார்.. இதனால் ஒருவரை மட்டும் பணம் எடுத்து வர ஏடிஎம் செல்லுமாறு சொல்லி உள்ளனர்.. உடனே அங்கிருந்த நண்பர்களில் ஒரு இளைஞர் மட்டும், பணம் எடுக்க ATM சென்டருக்கு சென்றார்.
பால்கனிக்கு சென்ற பெண்
போலீசாரின் இந்த கெடுபிடி, மிரட்டல்கள் நடந்து கொண்டிருந்தபோது, இதெல்லாம் பார்த்து அந்த இளம்பெண் பதற்றமாகிவிட்டார்.. உடனே ஓட்டல் ரூமில் இருந்த பால்கனிக்கு சென்று, திடீரென பால்கனியிலிருந்து கீழே குதித்துவிட்டார்.. ஆனால், கீழே விழாமல், ஓட்டலின் சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியில் சிக்கி கொண்டார்.. இதனால் அந்த பெண்ணின் அவரது தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீரியஸ் கண்டிஷனில் இளம்பெண்
இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் அப்பா, HAL போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போதுதான், புகாரை விசாரிக்க போலீசார், இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றதும், அந்த பயத்தின் காரணமாகவே இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசாரின் செயல்பாடு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது... அந்த பெண்ணுக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications