இன்னும் 4 நாளைக்கு இப்படியே மழை பெய்யும்.. அப்படியே என்ஜாய் பண்ணுங்க.. சேதி சொன்ன வெதர்மேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. இப்படியே நாலஞ்சு நாளைக்குப் பாடிட்டிருக்க வேண்டியதுதான்.. காரணம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிரித்தெடுத்த மழை இன்னும் 4 நாட்களுக்குத் தொடரப் போகிறதாம்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த சந்தோஷ செய்தியை டிவீட் செய்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை வட கிழக்குப் பருவ மழைதான் அதிக பொழிவைக் கொடுக்கக் கூடியது.. இதோ ஐப்பசி பிறந்து விட்டது, விரைவில் வட கிழக்குப் பருவ மழையும் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் தமிழகத்தின் வட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

Night time rain will continue for 4 days, says Weatherman

குறிப்பாக சென்னையின் வட பகுதிகளில் மழை விட்டு வெளுத்து விட்டது. இரவுக்கு மேல் பெய்த மழையை சென்னையின் பிற பகுதி மக்கள் குறிப்பாக புறநகர்ப் பகுதி மக்கள் அதிகாலையில் அனுபவித்தனர்.

இந்த நிலையில் இந்த மழை இன்னும் நான்கு நாட்களுக்கு இதேபோல தொடரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அவர் போட்ட டிவீட்டில், டமால் டுமீல் மற்றும் அதி வேக மழை பெய்து வருகிறது. இது அடுத்த நான்கு நாட்களுக்கு இதேபோல தொடரும் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் இது வெப்ப சலனத்தால் ஏற்பட்டுள்ள மழைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவா இருந்தா என்னங்க.. மழை பெய்தால் ரசிப்போம்.. குடை பிடிக்காமல் நனைந்து மகிழ்வோம்.. கவனமாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+