கெத்து காட்டும் திவ்யா.. எகிறி அடிக்கும் நீலகிரி.. கொரோனா தடுப்பூசி போடுவதில்.. "நம்பர் 1".. அசத்தல்
தடுப்பூசி போடுவதில் நீலகிரி முதலிடத்தில் உள்ளது
சென்னை: தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று பெருமிதத்துடன் சொல்கிறார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா..!
கடந்த வருடம் நீலகிரியையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.. காரணம், ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா, என மூன்று மாநில எல்லைகளையும் கொண்டது இந்த மலை மாவட்டம்... இதனால், எல்லைகள் அனைத்துமே இழுத்து மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
இருந்தாலும், கோயம்பேட்டில் இருந்து லாரிகள், காய்கறிகளை கொண்டு செல்வதாலும், இறக்குமதி செய்வதாலும் தொற்று எப்படியோ நுழைந்துவிட்டது.. கடைசி வரை போராடி, மற்ற மாவட்டங்களையும்விட பச்சை மண்டலத்துக்கு முதலிடத்துக்கு மிக வேகமாக முன்னேறியது நீலகிரி. இதற்கு காரணம் சாட்சாத் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான்.

ஸ்பாட் ஃபைன்
இப்போதும் அப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறார். இப்போதைக்கு நீலகிரியில் தொற்று குறைந்து காணப்படுகிறது.. ஒருநாளைக்கு 40 முதல் 80 வரை கேஸ்கள் வந்து கொண்டிருந்தாலும், பொது மக்கள் அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என்று கட்டாயம் போடப்பட்டுள்ளது. அப்படி யாராவது மாஸ்க் போடாவிட்டாலும் 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடப்படுகிறது.

தடுப்பூசி
மேலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஏற்கனவே தெரிவித்திருந்ததால், அதற்கேற்றபடி தடுப்பூசியை செலுத்தி கொள்ள மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. சராசரியாக 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டமானது இன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது.

ஆஸ்பத்திரி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் 5 கோவிட் சென்டர்கள் தயார் நிலையில் இருக்கின்றன.. அரசு ஆஸ்பத்திரிகளில் 110 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளோடு ரெடியாக இருக்கிறது.. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே 1,500 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு தொட்டி உள்ளது.. இப்போது, 6,000 லிட்டர் ஆக்சிஜனை சேமிக்கும் வகையில் தொட்டி அமைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

ரிசார்ட்கள்
இப்போதைக்கு 9 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பிலும் உள்ளன.. அதேபோல, சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆங்காங்கே கண்காணித்து வருகிறது. இந்த முறையும் சுற்றுலா பயணிகள் யாரும் வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துவிட்டதால், ஊரே வெறிச்சோடி போயுள்ளது... ஹோட்டல்கள், ரிசார்ட்கள், காட்டேஜ்கள் எல்லாமே மூடப்பட்டுவிட்டன.. இதனிடையே, கலெக்டர் திவ்யா செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசினார்.

நிறுவனங்கள்
அப்போது அவர் சொல்லும்போது, "தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 2வது முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை.. பொதுமக்களிடையே தொடர்பில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாருமே கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.

டெஸ்ட்
தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஆனால் அவங்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கு.. 2-வது டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு இல்லை... 80 வயசு பாட்டி ஒருத்தர் முதல் டோஸ் போட்டுக்கிட்டு, ஆக்சிஜன் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.. உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே வந்து டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications