அந்த 2 இடத்தை பிடிக்க போவது யாரு? அண்ணாமலை கையில் முடிவு.. உற்று பார்க்கும் திமுக.. திரும்பிய அதிமுக
வரும் நாட்களில் இன்னும் சில அதிருப்தி லீடர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி வருவது கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் மேலும் சில நிர்வாகிகள் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தோல்வி காரணமாக எடப்பாடி அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நினைத்ததற்கு எதிர் மாறாக எடப்பாடி அணியை நோக்கி நிர்வாகிகள் நகர தொடங்கி உள்ளனர். அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி பாஜகவில் இருந்து கூட நிர்வாகிகள் எடப்பாடி அணிக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

எடப்பாடியார்
பாஜகவில் தீவிரமாக செயலாற்றி வந்த அதன் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் என்று கூறிவிட்டு, அவரை பாராட்டி அதிமுகவில் இணைந்து உள்ளார் நிர்மல் குமார்., அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் அவரின் தலைமை குறித்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நிர்வாகி வெளியேற்றம்
இவர் பாஜகவில் ஐடி விங் தலைவராக இருந்தவர். இது போக பாஜக ஐடி விங் செயலாளர், திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனது போஸ்டில், கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம் ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார் தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார், தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்... (அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன் மாநில.பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு.. தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை..அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் அவருக்கு சின்ன பிரச்சினை வருது அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகணபதியை அசிங்கப்படுத்தினார்.. அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை, என்று விமர்சனம் வைத்து உள்ளார்.

விமர்சனம்
இப்படி பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி வருவது கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் மேலும் சில நிர்வாகிகள் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி வரும் நாட்களில் இன்னும் சில அதிருப்தி லீடர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது காலியாக இருக்கும் இந்த இரண்டு போஸ்டுகளுக்கு நிர்வாகிகளை அண்ணாமலை எப்போது நியமிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் ஐடி விங்கை தமிழ்நாட்டில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் நிர்மல் குமாருக்கு முக்கியமான பங்கு. இன்னும் கிரவுண்டில் பாஜக பெரிதாக வளரவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் பாஜக பெரிய அளவில் பிரபலமாக இருக்க தமிழ்நாட்டில் நிர்மல் குமார் முக்கிய காரணம்.

பொறுப்பு
பொதுவாக அரசியல் ஐடி விங்குகளில் வேகம் மிக முக்கியம். வேகமாக டிரெண்டுகளை செய்ததன் மூலம்தான் நிர்மல் குமார் பாஜகவின் ஐடி விங்கை பிரபலப்படுத்தினார். இந்த நிலையில்தான் அவர் தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். தற்போது அந்த பொறுப்பை பெற போகும் பாஜக நிர்வாகி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக பாஜக ஐடி விங் திமுகவை கடுமையாக தாக்கும் என்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் அதிமுகவும் இந்த பொறுப்பிற்கு வர போவது யார் என்பதை உற்றுப்பார்க்கும். அதேபோல் அதன் செயலாளரும் வெளியேறி உள்ளார். அதனால் அவரின் இடத்தை பிடிக்க போகும் நிர்வாகி யார் என்பதும் கேள்வியாகி உள்ளது. இதற்கான முடிவு அண்ணாமலை கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications