இப்படி வாழக் கூடாது.. பாடம் சொல்லும் நிர்மலா தேவியின் வாழ்க்கை!
Recommended Video

சென்னை: ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்பது இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி போகும் என்பது நிர்மலா தேவியின் வாழ்க்கை உணர்த்தும் பாடமாகும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. ஆனால் இன்று காலம் மாற மாற இதுபோன்ற பண்பாடுகளும் மாறிக் கொண்டே செல்கிறது. ஆண் திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் , ஒரு பெண் திருமணமான ஆணுடன் தொடர்பில் இருப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இவை முக்கியமாக பொழுதுபோக்கிற்காகவும் பணம், பதவி, சந்தோஷத்திற்காகவும் நடக்கும் யாரும் விரும்பத்தகாத விஷயமாகும். அப்படி பணம், பதவி ஆகியவற்றிற்காக அக்னி சாட்சியாக தாலி கட்டிய மனைவிக்கு கணவன் துரோகம் செய்வதும், மனைவியை மற்றொரு தாயாக பாவிக்கும் கணவருக்கு மனைவி துரோகம் செய்வதும் வீட்டுக்கு வீடு (சில) வாசற்படியாகிவிட்டது.
[உன் மகளும் வருவாரா?... நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி! ]

பிரச்சினை
யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கள்ளக்காதல் குற்றமில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதனால் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனை இனி இல்லை என்றாகிவிட்டது. இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததால் இந்த விஷயம் பிரச்சினையாகாத வரை இனிக்கும்.

பகீர் கிளப்புகிறது
ஆனால் அதே உல்லாச வாழ்க்கை பிரச்சினை என்று வந்து விட்டால் சிக்கல்தான். இதுதான் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நடந்தது. நல்ல படித்த பட்டதாரியான இவர் முதலில் கணவரின் கள்ளக்காதலை எதிர்த்தார். ஆனால் இறுதியில் இவருக்கே 10 கள்ளக்காதல்கள் இருந்துள்ளது பகீர் கிளப்புகிறது.

எதிர்காலம்
கணவருக்கு தொழிலில் நஷ்டம், தனக்கு வேலையின்மை இதெல்லாம் கூறி கள்ளக்காதலை நியாயப்படுத்திவிட முடியுமா. இரு பெண்களுக்கு தாயான நிர்மலா தேவியும் கள்ளக்காதலை கண்டுக்காமல் விட்ட சரவணபாண்டியனும் (நிர்மலாவின் கணவர்), தங்களது சந்தோஷத்தை மட்டுமே நினைத்தார்களே தவிர இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.

மகளின் வாழ்க்கை
முருகன் தனது மகளின் சடங்கு ஆல்பத்தை பார்த்து மகள் வருவாளா என கேட்டதாக நிர்மலா தேவியே கூறியுள்ளார். அதற்கு அவரோ அவர் வரமாட்டார் என்று கூறியுள்ளார். தப்பி தவறியும் மகளை கேட்கிறாயா என கோபப்படவில்லை. மகள்கள் மீதுதான் எத்தனை பாசம் நிர்மலாதேவிக்கு!. தன் வாழ்க்கைதான் திசை மாறி போனது. ஆனால் இவர் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் இவரது மகளின் வாழ்க்கையும் நாசமாகியிருக்கும்.

வாக்குமூலம்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியருக்கு அடுத்த நிலையில்தான் எல்லாம் வல்ல கடவுளையே வைத்துள்ளோம். ஆனால் இவரோ வயிற்றை கட்டி , வாயை கட்டி தன்னை நம்பி கல்லூரிக்கு அனுப்பும் ஏழைகளின் மகள்களின் வாழ்க்கையையும் நாசமாக்க பார்த்துள்ளார். சரி இவர்தான் இப்படி என்றால், முருகனும் கருப்பசாமியும்தான் மாணவிகளை அழைத்து வர சொன்னதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணம் மட்டுமே
நிச்சயமாக மாணவிகளின் வாழ்க்கையுடன் விளையாட நினைத்ததில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பங்கு இருந்திருக்காது. முக்கிய புள்ளிகள் சிக்காமல் இருக்க ஆனால் இவர்கள் மூவரும் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இனி முருகன், கருப்பசாமியின் வாழ்க்கை கேள்விக்குறிதான். எனவே தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எத்தனை இடியாப்ப சிக்கல்களை கொடுக்கும் என்பதற்கு முருகன், கருப்பசாமி, நிர்மலா தேவி ஆகியோரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். ஆசிரியர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications