அடுத்த வாரம் "அசைன்மென்ட்".. கோட்வேர்ட் பயன்படுத்தி மாணவிகளை வளைக்கப் பார்த்த நிர்மலா தேவி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: கல்லூரி மாணவிகளிடம் போன் போட்டு எப்படி மூளை சலவை செய்தேன் என்பது குறித்து நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நிர்மலா தேவிக்கு யாருடன் கள்ளத்தொடர்பு என்பது குறித்தும் யாருக்காக மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்பது குறித்தும் நேற்று முதல் பாகத்தில் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் இன்று மாலை மலர் நாளிதழில் வெளியாகியுள்ளது

    இதுகுறித்து அவர் சிபிசிஐடி போலீஸாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அவர் கூறுகையில், ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநருடன் எடுத்த வீடியோவை கணிதம் படித்த 3-ம் ஆண்டு மாணவிகள் மூவர், முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், எனது மகள் மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினேன். எனக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக மாணவிகள் நம்பி எனது பேச்சை கேட்பார்கள் என்று நினைத்தேன்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    மார்ச் 15-ந் தேதி மாலை 4.45 மணிக்கு மாணவிகள் 4 பேரும் ஒன்றாக பேசிவைத்துக்கொண்டு, ஒரே இடத்தில் இருந்தபடி ஒரு மாணவியின் செல்போனில் இருந்து எனக்கு பேசினார்கள். மாணவிகள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்ட நான், உடனே அந்த மாணவி போனுக்கு தொடர்புகொண்டு, ஸ்பீக்கரில் போடச் சொல்லி 4 மாணவிகளிடமும் ஒரே நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் பேசி அவர்களை மூளைச்சலவை செய்தேன். அந்த உரையாடலில் பெரிய உயர் அதிகாரி என்று துணை வேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் எண்ணிக்கொண்டு யூகத்தின் அடிப்படையில் பேசினேன். வாய்ப்பு வருவதாக நான் சொல்லும்போது, பாடக் குறிப்பு தயாரிப்பதை மனதில் வைத்தே பேசினேன்.

    முருகன், கருப்பசாமி

    முருகன், கருப்பசாமி

    உயர் அதிகாரி என்று நான் சொன்னது, துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முருகன் நெருக்கமாக இருந்ததால், முருகன் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். அடுத்து, "அவர்கள் கொஞ்சம் எதிர்பார்க்கிறார்கள்" என்று நான் சொன்னது, முருகன், கருப்பசாமி ஆகியோர் மாணவிகள் தான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத்தான் அவ்வாறு சொன்னேன்.

    விவரம்

    விவரம்

    பணத்தை உங்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி போட்டுவிடுவேன் என்றும், மாதாமாதம் சம்பளம் கொடுக்கிற மாதிரி உங்கள் வீட்டுக்கு பணம் வரும் என்று மாணவிகளிடம் நான் கூறியதற்கு, அவர்கள் உடன்பட்டு சம்மதித்தால் அதற்குரிய பணத்தை கொடுப்பதாக குறிப்பிட்டேன். ‘என்கிட்ட கேட்டுக்கொண்டே இருக்காங்க' என்று கருப்பசாமியைத்தான் சொன்னேன். எனக்கு அவர்கள் சில உறுதியை கொடுத்திருக்கிறார்கள் என்பது, மாணவிகளை பற்றிய விவரம் வெளியே தெரியாது என்பதைக் குறிப்பிட்டு கூறினேன்.

    பெரிய லெவல்

    பெரிய லெவல்

    அடுத்த வாரம் ஒரு முக்கியமான ‘அசைன்மெண்ட்' இருக்கு என்று நான் சொன்னது, கருப்பசாமி அடுத்த வாரம் சென்னை செல்லும்போது தன்னுடன் கல்லூரி மாணவிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதை மனதில் வைத்து சொன்னேன். ‘கவர்னர் வரும் வீடியோவை அனுப்பியிருந்தேன் இல்ல, அப்ப சில விஷயங்கள் நடந்துச்சு. நடுவில் ஸ்கிரீன் இல்ல, கவர்னர் லெவல் கவர்னர் தாத்தா இல்ல' என்று நான் கூறியதற்கு காரணம், எதார்த்தமாக கவர்னர் வருகையை நான் வீடியோ எடுத்து அனுப்பிய நிலையில், மாணவிகள் என்னை நம்பி சம்மதிப்பார்கள் என்று கூறினேன். ‘ரொம்ப பெரிய லெவல்ல எனக்கு ஆட்களை தெரியும் என கூறினால்தான் மாணவிகள் சம்மதிப்பார்கள்' என அவ்வாறு கூறினேன்.

    இனி தொல்லை செய்யமாட்டேன்

    இனி தொல்லை செய்யமாட்டேன்

    மாணவிகள் நான் கூறிய விஷயத்துக்கு சம்மதிக்கவில்லை. அதற்கு நான் உடனே பதில்கூற தேவையில்லை என்றும், நிதானமாக தங்களுக்குள் கலந்துபேசி, மார்ச் 17-ந் தேதிக்குள் முடிவு சொல்லுமாறு கூறினேன். அவர்களின் முடிவை தெரிந்துகொள்வதற்காக மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தேன். அவர்களது பதிலில்,
    அவர்களுக்கு இஷ்டமில்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதனால், நான் அவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக இனி பேசமாட்டேன் என்றும், இந்த விவரத்தினை வெளியாட்கள் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+