சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு ஏற்படும்... நிர்மலா பெரியசாமி எச்சரிக்கை

    சென்னை: சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை உடைக்கும் காட்சியால் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்று, அதிமுகவின் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.

    விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், அதிமுக அரசை விமர்சனம் செய்வதாக, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர், குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.

    இதேபோன்ற கருத்தை அதிமுகவின், நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.

    ஆச்சரியமா இருக்கே... விஜய் மீது மட்டும் அப்படி என்னதான் காண்டு பாஜகவுக்கு?? ஆச்சரியமா இருக்கே... விஜய் மீது மட்டும் அப்படி என்னதான் காண்டு பாஜகவுக்கு??

    இலவச திட்டங்கள்

    இலவச திட்டங்கள்

    இதுகுறித்து டிவி சேனல் நிகழ்ச்சியொன்றில் நிர்மலா பெரியசாமி கூறியதாவது: இலவச திட்டங்களுக்கு பெயர் பெற்றது ஜெயலலிதா ஆட்சி. மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள், காலணி உட்பட பல இலவச திட்டங்கள்.

    அதிமுக அரசு கொடுத்த பொருட்கள்

    அதிமுக அரசு கொடுத்த பொருட்கள்

    திமுகவினர் இலவச டிவிதான் கொடுத்தனர். இத்தனை திட்டங்களும் இருக்கும்போது, இலவச திட்டத்தை அறிமுகம் செய்ததே திமுகதான். எனவே அவர்கள் கொடுத்த டிவியை உடைப்பது போல காட்சி வைத்திருக்க வேண்டும். காட்ட வேண்டும் என்றிருந்தால், அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்திருக்க வேண்டும். ஆனால் மிக்சி, கிரைண்டர், ஃபேனை மட்டுமே உடைப்பதை போல காண்பிப்பது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

    மிக்சி, கிரைண்டர்

    மிக்சி, கிரைண்டர்

    மிக்சி, கிரைண்டர் என்பது மிகப்பெரிய சந்தோஷத்திற்குரிய பொருட்கள். தம்பி விஜய்க்கோ, படத்தை தயாரித்த நிறுவனத்தார்களோ, மற்றவர்களுக்கோ இந்த பயன்பாட்டின் அருமை தெரியாது. வாழ்நாளில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இல்லாமல், தலைமுறை தலைமுறையாக வாழும் ஏழை மக்களுக்குத்தான் அதனுடைய அருமை தெரியும்.

    ஏழைகள் வளர்ச்சி

    ஏழைகள் வளர்ச்சி

    லேப்டாப் கொடுத்தார்களே, ஏன் லேப்டாப்பை போட்டு உடைப்பதை போல படத்தில் காண்பிக்கவில்லை. அதிமுக அரசு கொடுத்த, பொருட்களை மட்டுமே உடைப்பது போல காண்பித்தில் உள் நோக்கம் உள்ளது. அப்படி செய்திருந்தால் படிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும். ஒருபக்கம் இலவச மருத்துவமனை, இலவச கல்வி உள்ளிட்டவற்றை கொடுத்து மக்களை தூக்கிவிடும் அதே நேரத்தில், விலையில்லா பொருட்கள் மூலம், ஏழை மக்களை மற்றவர்களுக்கு ஈடாக வளர்த்துவிட்டதும் அதிமுக அரசுதான். இவ்வாறு நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.

    English summary
    Nirmala Periyasamy slam Sarkar film for it's scenes, she warns actor Vijay.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X