6000 வெள்ள நிவாரணம்.. தமிழக அரசை வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்.. 10 முக்கிய பாயிண்ட்டுகள்
சென்னை: மழை வெள்ள சேதம் தமிழ் நாட்டில் வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் புரட்டிப்போட்டுள்ள நிலையில் மத்திய அரசை மாநில அரசும், மாநில அரசை மத்திய அமைச்சர்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மாநில அரசை வெளுத்து வாங்கியுள்ளார்.
வெள்ள சேதம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மழை வெள்ள சேதத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த போது தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து பெரு வெள்ளம் தாக்கியது. மழையை சரியாக கணித்து கூறவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தை தமிழக அரசு குற்றம் சாட்டியது.

நிர்மலா சீதாராமன்: இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். வானிலை ஆய்வு மையம் தொடங்கி ரூ.6000 நிவாரண நிதி வரைக்கும் அவர் கூறிய 10 முக்கிய கருத்துக்களை பார்க்கலாம்.
மழை வெள்ளம்: தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 50 செ.மீ மழை என்பது தோராயமாக ஒருவருடத்துக்கு பெய்ய வேண்டிய மழை அளவு. அது ஒரேநாளில் பெய்ய மழைநீர் தேங்கி மக்கள் தவிக்கும் நிலை உருவானது. டிசம்பர் 18-ம் தேதி காலையிலேயே தென்மாவட்ட மழை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. அன்று மதியமே மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நான்கு மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்புப் படைகள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
31 பேர் உயிரிழப்பு: அதற்கேற்ப உதவிகள் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை நான் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டேன். உள்துறை அமைச்சகமும் செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. அனைத்துப் படைகள் மூலமாகவும் 21ஆம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தகவலின்படி, 31 பேர் உயிரிழந்துள்ளனர். உடனடியாக மத்திய அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டாலும் இவ்வளவு பேர் உயிரிழந்தது என்பது வருத்தமளிக்க கூடிய விஷயம்.
பேரிடர் மீட்பு படை: மீட்புப் பணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் பணிபுரிந்தன. இதனால் தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே சார்பில் மீட்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தென்மாவட்ட மழை, வெள்ளம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் கண்காணிப்பால் உடனுக்குடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இந்திய விமானப் படை, கடற்படை, கடலோர காவல்படைகளின் 9 ஹெலிகாப்டர் 70 முறை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
கணக்கெடுப்பு: சாதாரணமாக ஒரு வெள்ளம் ஏற்படும்போது வெள்ள நீர் வடிந்த பிறகுதான் மத்திய அரசின் கணக்கெடுப்பு துறைகள் செல்லும். ஆனால், தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசின் குழு 19ஆம் தேதி மாலையே நிலைமையை கண்காணிக்க சென்றுவிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இவை அனைத்தும் 5,049 பேரை மீட்டுள்ளனர்.
பேரிடர் நிதி: ஒவ்வொரு வருடமும் மாநில பேரிடர் நிதிக்கு மத்திய பேரிடர் நிதியில் இருந்து பணம் வழங்குவது உண்டு. இந்த நிதியாண்டில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் இருந்துள்ளது. இந்த வருடத்துக்கு மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம். இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டோம்.
வானிலை மையம் தகவல்: சென்னை வானிலை மையம் தென்மாவட்ட மழை குறித்து டிசம்பர் 12ஆம் தேதியே தகவல் கொடுத்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ள மையம் சென்னை வானிலை மையம். அந்த மையத்தில் இருந்து தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு.
அமைச்சர்கள் எங்கே: இன்ச் பை இன்ச் இவ்வளவு மழை வரும் என்பதை கணித்துக் கூற முடியாது. இந்த முறை தனிப்பட்ட வகையில் நான் இதில் ஈடுபட்டேன். பிரதமரையும், அமித் ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தென்மாவட்ட வெள்ளம் குறித்து கோரிக்கை வைத்த உடனேயே என் முன்னால் மீட்புப் பணிக்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது. ஆனால், தென்மாவட்ட பொறுப்பு தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்?.
தமிழக அரசு நடவடிக்கை என்ன?: தேசிய பேரிடர் மீட்புப் படை செல்லும் முன் அவர்கள் அங்கு இல்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை சென்ற பிறகே தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றார்கள். கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?.
ரூ.4000 கோடி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன். சென்னையில் ரூ.4000 கோடி செலவிட்டு மழைநீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே. அப்போது 92% சதவீதம் வடிகால் பணிகளுக்கு செலவழித்தாக கூறிவிட்டு தற்போது மழை வெள்ளம் வந்ததும் அதே அமைச்சர் 42% தான் செலவழித்தோம் என மாற்றி பேசுகிறார்.
டெல்லி போனது ஏன்: 2015 வெள்ளத்துக்கு பிறகு கத்துகொண்ட பாடம் என்ன?. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?. தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து நாங்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தென்மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தார் என்று கூறினார். போகிற போக்கில் 3 நாட்களுக்கு பிறகு பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்.
உதயநிதி அப்படித்தான்: பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை.. ஒழிக்கவே வந்து இருக்கிறோம் என்று பேசினார் அல்லவா.. அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படின்னு கேட்க முடியுமா? அவுங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழ் அறிஞர். அதனால், பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும் என்றார்.
வங்கியில் போடலாமே: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 கொடுக்கிறார்கள். அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த பணம் யாருக்கு கொடுக்கிறார்கள். அது மக்கள் பணம்தான். அரசு கொடுக்கும் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் போடலாமே. அதை ஏன் கையில் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார் நிர்மலா சீதாராமன்.
அரசு பணம் தானே: யாருக்கு அந்த பணம் போய் சேர்ந்திருக்கிறது என்று பார்க்கமுடியும். நீங்க கொடுக்கிற பணம் நிஜமாகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் போயிருக்கிறது என்று நினைக்கிறேன் கேள்வி கேட்க முடியாது. அது அரசு பணம் தானே என் அப்பன் சொத்தில்லையே... உங்க அப்பன் சொத்தில்லையே.. வங்கி கணக்கில் நேரடியாக போடுங்கள் என்றார். 6000 போதுமா வேண்டாமா என்று நான் கேட்கவில்லை. கொடுக்கும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்றார் நிர்மலா சீதாராமன்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications