சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டோமொபைல் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது ஏன்?.. நிர்மலா விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Subramanian swamy criticized Nirmala Sitharaman

    சென்னை: ஆட்டோமொபைல் உற்பத்தியில் பல காரணங்களால் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

    சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 100 நாட்களில் மத்திய அரசு சாதித்தவை குறித்து விளக்கினார்.

    Nirmala Sitharaman explains why slowdown in Automobile industry?

    அவர் கூறுகையில் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

    அப்போது பல காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய சிறிய வங்கிகளை இணைக்க முடிவு செய்தோம். வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை குறித்து அந்தந்த வங்கி நிர்வாகமே முடிவு எடுக்க வேண்டும்.

    சந்திரயான் திட்டம் 99.9 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman explains why there is a decrease in production in automobile industry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X