நிர்மலா சீதாராமனையும் "உள்ளே" கொண்டு வந்து.. இது சர்வாதிகார ஆட்சியா? பதவி விலக சொல்றது யார் பாருங்க
சென்னை: இது சர்வாதிகார ஆட்சியா? ஜனநாயக ஆட்சியா? தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கொந்தளித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிடுமாறு சுப்ரீம் கோர்ட், பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து கூறியிருக்கிறார்..
செல்வப்பெருந்தகை: செய்தியாளர்களிடம் பேசியபோது, "மறுபடியும் ஒருமுறை நீதி இன்னும் இறக்கவில்லை, உயிரோடு இருக்கிறது என்பதை இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வாயிலாக உணர்த்தி இருக்கிறது. இது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
எந்த நிறுவனங்களில் தேர்தல் நிதி நன்கொடையாக பெற்று இருக்கிறார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகள் சோதனைக்கு பிறகு எந்தெந்த நிறுவனங்களில் இருந்து பாஜகவுக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வந்திருக்கின்றன என்பன போன்ற விவரங்கள், தேர்தலுக்கு முன்பாக பொதுவெளியில் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
நிர்மலா சீதாராமன்: இதை மூடி மறைக்க முயற்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இது சர்வாதிகார ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா என்பதை மக்கள் தேர்தலில் முடிவு செய்வார்கள். தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்றார் செல்வப்பெருந்தகை.
இதனிடையே செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். திடீரென தேர்தல் ஆணையர் பதவி விலகியது குறித்தும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதிர்ச்சி அலைகள்: அந்த அறிக்கையில், "நாடாளுமன்ற தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி இதுவரை தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஒரு நீதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் அடங்கிய குழு தான் தேர்வு செய்யும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு சட்டத் திருத்தம் செய்து உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு பிரதமர், அவரது பரிந்துரைப்படி ஒரு அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
பரிந்துரை: இதன்மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் இரு உறுப்பினர்களையும், அவரது பரிந்துரையின்படி விரைவில் நியமிக்க இருக்கிறார். இது 140 கோடி மக்களை கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்.
நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான பட்டியல் வெளிவந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாஜவுக்கும் உள்ள ரகசிய உறவுகள் அம்பலமாகும் என்ற அச்சம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் தேர்தல் ஆணையத்திலிருந்து அருண் கோயல் பதவி விலகுகிற நிலை ஏற்பட்டது.
சர்வாதிகாரி: இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றும் என்று உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார்.ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வு" என்கிறார் செல்வப்பெருந்தகை.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications