தெற்கு நோக்கி வருகிறது.. "நிசார்கா" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா? எங்கெல்லாம் மழை பெய்யும்?
சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Recommended Video
தமிழகத்திற்கு மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்கவில்லை. இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில்தான் கரையை கடந்தது. இதனால் அங்கு கடுமையாக மழை பெய்தது.
மேற்கு வங்கத்தில் இந்த புயலால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் ஒடிசாவிலும் இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டது.

தமிழகம் மழை
ஆனால் தமிழகத்தில் ஆம்பன் புயலால் மழை கொஞ்சம் கூட பெய்யவில்லை. மாறாக இதனால் தமிழகத்தில் வெயில் அதிகரித்தது.இதனால் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெப்ப காற்று வீசியது. தமிழகத்தில் வீசிய வெப்ப காற்று காரணமாக அனல் வெப்பம் அதிகரித்தது. இதனால் மே மாதத்தில் கடைசி 10 நாட்களில் தினமும் தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது.

அடுத்து வரும் புயல்
இந்த நிலையில்தான் இந்தியாவில் அடுத்த புயல் ஏற்பட உள்ளது.அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு நிசார்கா என்று பெயர் வைக்கப்படும். ஜூன் 2-3ல் இந்த புயல் காரணமாக மழை ஏற்பட வாய்ப்புள்ளது.

தாக்குமா
ஆனால் நிசார்கா புயல் தமிழகத்தை தாக்காது . ஓமன் அருகே இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. தெற்கு நோக்கி இந்த தாழ்வு நிலை நகர்ந்து வருகிறது. இதனால் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத்தில் புயல் தாக்கும். கேரளாவில் நல்ல மழை பெய்யும். மகாராஷ்டிரா, குஜராத்தில் புயல் பாதிப்புகள் இதனால் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

நிலை என்ன
ஆனால் தமிழகத்தை நிசார்கா புயல் தாக்காது. தமிழகத்தில் வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. கேரளா அருகே இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்யும். கேரளாவில் புயல் காரணமாக பெய்யும் மழை காரணமாக தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்யும்.

வேறு எங்கு மழை
அதேபோல் கர்நாடகாவிலும் இந்த மழை அரபிக்கடலோரம் பெய்யும். இதனால் கர்நாடகா அருகே எல்லையில் இருக்கும் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் காவிரியில் வரும் நாட்களில் நீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications