அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள சூழலில், தேர்தலுக்குப் பிறகு என்டிஏ அரசு அமையும் என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார். அதிமுக அரசா இல்லை என்டிஏ அரசா என்பதில் தொடர்ந்து விவாதம் இருந்து வரும் சூழலில், நிதின் நபினின் இந்த கருத்துகள் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழலில், இதில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. அப்போது முதலே தமிழ்நாடு தேர்தலில் அதிமுக வென்றால் அது அதிமுக ஆட்சியாக இருக்குமா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியாக இருக்குமா என்பதில் கேள்வி இருந்து வருகிறது.

Nitin Nabin on Tamil nadu election 2026 NDA Will Form Government In Tamil Nadu Says BJP Leader

தமிழ்நாடு தேர்தல்

என்டிஏ ஆட்சியாக இருக்காது எனச் சொல்லும் அதிமுக தலைவர்கள், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்று அதிமுக தனித்து ஆட்சியை அமைக்கும் என்றே தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதேநேரம் தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தேசிய தலைவர்கள், என்டிஏ அரசு அமையும் என்றே சொல்லி வருகிறார்கள். சில நேரங்களில் அதிமுக என்ற பெயரையே கூடச் சொல்வதில்லை. இதனால் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் குழப்பமே இருக்கிறது.

இதற்கிடையே பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் மீண்டும் இது தொடர்பாகச் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். அதாவது தமிழக தேர்தல் ஆச்சரியம் அளிக்கும் எனச் சொன்ன அவர், மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டதாகவும் தமிழகத்தில் என்டிஏ அரசே அமையும் என்றும் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தபோது நிதின் நபின் இந்த கருத்துகளைக் கூறினார்.

அண்ணாமலை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.. லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கூட பிரச்சாரம் செய்தார். அவருக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை.

என்டிஏ ஆட்சி

நாங்கள் ஒரே டீமாகவே தேர்தலைச் சந்திக்கிறோம்.. தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் அதிமுக தான் முக்கிய கட்சியாக உள்ளது. நாங்கள் அங்கு பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் என்டிஏ ஆட்சி தான் அமையும்.. அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக 27 இடங்களில் களம் காண்கிறது. பெரிய வெற்றியைப் பெறுவோம்.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். திமுகவின் ஊழல் அரசியலுக்கு மக்கள் பதிலடி தருவார்கள். மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி அமைக்கும். மாற்றம் ஏற்படும் என்பதற்கு உறுதியான அறிகுறிகள் தெளிவாக உள்ளன" என்றார்.

மும்மொழிக் கொள்கை

தொடர்ந்து மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த நிதின் நபீன், "பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நாங்கள் பின்பற்றுகிறோம். தேசியவாத சிந்தனையை நாடு முழுக்க எடுத்துச் சென்றுள்ளோம். அதேநேரம் பிராந்திய உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளித்து வருகிறோம். நாங்கள் அனைத்து பண்பாட்டு மரபுகளையும் மதிக்கிறோம்.. ஊக்குவிக்கிறோம். மேற்கு வங்கத்தில் துர்கா தேவி பூஜை செய்ய உயர் நீதிமன்ற அனுமதி தேவைப்படும் சூழலே உள்ளது. நாங்கள் பிராந்தி மரபுகளை ஊக்குவிப்போம். மேலும், ஆதிக்க முயற்சிக்கும் எதிராகவே இருப்போம்" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+