நிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் பெட்ரோல் பங்க் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரையை கடக்கிறது.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தார்.

மதுரை
மேலும் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு செல்லும் அரசு பஸ்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.. பஸ் சேவை நிறுத்தம் குறித்த அரசின் அறிவிப்பு பற்றி அறியாதவர்களும் பஸ் ஸ்டாண்டில் மதியம் முதலே அவஸ்தை பட்டுவிட்டனர்.

அதிக கட்டணம்
இந்த 7 மாவட்டங்களில் பஸ் ஓடாததால், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. இதனிடையே, பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல்
ஆனால், கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நிவர் புயல் கரையை கடக்கும்போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும், மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை
புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் என்றும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications