என்எல்சி ஊதிய உயர்வு விவகாரம்.. ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு
சென்னை: ஒப்பந்த தொழிலாளர்களுடனான ஊதிய உயர்வு விவகாரத்தில் தீர்வுகாண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
என்.எல்.சி.-யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட எஸ்பி-க்கு உத்தரவிட்டிருந்தார்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த இடங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட எஸ்.பி. தாக்கல் செய்யவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, போராட்டம் நடத்த அனுமதிக்கும் வகையில் குறிக்கப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதி, தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்க இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
ஆனால் என்.எல்.சி தரப்பில் தொழில் தகராறுகள் சட்டத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அதிகாரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, அவர் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டதுடன், இந்த விவகாரத்தில் என்.எல்.சி. நிறுவனம் தீர்வுகாண விரும்புகிறதா அல்லது பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதியன்றே தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications