கோவை மருதமலை கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க தடை கோரி வழக்கு.. வனத்துறை பதில் என்ன
சென்னை: வன விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் ஆனைக்கட்டி வனப்பகுதியில் சட்டவிரோதமாக, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருப்பதாகவும், வனத்துறை அனுமதியின்றி மருதமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை கட்டப்பட உள்ளது என்றும் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், மருதமலை முருகன் கோவிலில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு தடையில்லா சான்று கேட்டு கோவில் நிர்வாகம் இதுவரை தங்களிடம் விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
கோவையின் புகழ் பெற்ற மருதமலை முருகன் கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படஉள்ளது. இந்த சிலை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவிலின் குன்றில் அமைய இருக்கிறது. இந்த சிலை அமைக்கும் பணி விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில் "ஆனைக்கட்டி வனப்பகுதியில் சட்டவிரோதமாக, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகளை மூடி, அதன் கட்டிடத்தை இடிக்க வேண்டும்.
மருதமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை கட்டப்பட உள்ளது. வனப்பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் சிலை அமைப்பதற்கு அறநிலையத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். கோவையில் இருந்து ஆனைக்கட்டி வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதால், இந்த சாலையை இரவு நேரங்களில் மூட உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வன விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்திருந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் விவரம் வருமாறு: 300 சதுர மீட்டருக்குள் தனியார் தங்கும் விடுதிகள் கட்டியிருந்தால், வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற தேவையில்லை. அதேநேரம், இந்த விடுதிகள் பட்டா நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் கூட்டு ஆய்வுகளை நடத்த வேண்டும். வனப்பகுதிக்குள் இந்த விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு 3 மாத கால அவகாசம் வேண்டும்.
மருதமலை கோவிலில் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க மலை பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறவேண்டும். ஆனால், இதுவரை தடையில்லா சான்றிதழ் கேட்டு மருதமலை கோவில் செயல் அதிகாரி விண்ணப்பம் எதுவும் செய்யவில்லை.
வனப்பகுதியில் உள்ள சாலையை இரவில் மூட வேண்டும் என்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த சாலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை காட்டு பன்றி, காட்டுமாடு, மான் என்று 5 வனவிலங்குகள் மட்டுமே வாகனம் மோதி இறந்துள்ளன. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications