சைலண்ட் மோடிற்கு செல்லும் சென்னை சென்டிரல்! இனி எந்த ஆடியோ அறிவிப்பும் வராது! பயணிகள் என்ன செய்யணும்
சென்னை சென்டிரல் சைலண்ட் ரயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்னை: 150 ஆண்டுகள் பழமையான சென்னை சென்டிரல் ரயில் நிலையம் சைலண்ட் ரயில் நிலையமாக மாறியுள்ளது. அதாவது இனிமேல் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில் குறித்து எந்தவொரு ஆடியோ அறிவிப்புகளும் வராது.
தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பரபரப்பான ரயில்நிலையம் எது என்றால் பலருக்கும் சென்டிரல் ரயில் நிலையமே நினைவுக்கு வரும்.. சென்டிரலுக்கு எந்த நேரத்தில் சென்றாலும் மக்கள் நூற்றுக் கணக்கில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கிய மாற்றம் ஒன்று சென்டிரல் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

சென்னை சென்டிரல்
சென்னையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையானது டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்.. நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் சென்னையில் இருந்து நேடியாக ரயில் சேவை உள்ளது. இதனால் எப்போதும் சென்டிரல் ரயில் நிலையம் பரபரப்பாகவே இருக்கும். எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னை சென்டிரல் கூட்டம் குறைந்தபாடில்லை. எப்போதும் கூட்டம், ரயில் குறித்த அறிவிப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

சைலண்ட் மோடில் சென்டிரல்
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திடீரென சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அமைதியானது. அதாவது எப்போதும் ரயில் குறித்த அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிக்கப்படும் நிலையில், அன்று எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது ஏனென்றால், சென்னை சென்டிரல் ரயில் நிலையம், ஞாயிற்றுக்கிழமை முதல் சைலண்ட் ரயில் நிலையமாக மாறியுள்ளது. இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் முழுவதுமாக இப்படி சைலண்ட் ரயில் நிலையமாக மாறுவது இதுவே முதல்முறையாகும்.

ஆடியோ அறிவிப்புகள்
இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் ரயில்களை எந்த பிளாட்பார்மில் இருக்கிறது என்பதைக் கண்டறிய உதவ பொது அறிவிப்பு முறை இருக்கும். இப்போது முதல் முறையாக அறிவிப்பு முறைக்கு குட்பை சொல்லியுள்ளனர். விமான நிலையங்களில் இருப்பதோ போலவே அதிக உதவி மையங்களை அமைத்தும், ரயில் குறித்த தகவல்களை பில் போர்டில் இடம்பெறச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்டார்.

மாற்று வழி
அதில் அனைத்து பில் போர்டுகளும் இயங்கும் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பயணிகள் வசதிக்காக உதவி மையங்களில் போதிய ஆட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து கேட்களிலும் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளைக் காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல பயணிகள் காத்திருக்கும் இடங்களிலும் 40-60 இன்ச் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அறிவிப்புகள் வராது
சென்டிரல் ரயில் நிலையத்தில் மட்டுமே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையங்களில் வழக்கம் போல அறிவிப்புகள் தொடரும். சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமின்றி விளம்பர ஆடியோக்களும் இருக்காது. என்று கூறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ரயில்வே ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் தகவல் மையங்களைப் பயணிகளுக்கு வழிகாட்டும் என்று கூறப்பட்டுள்ளது

பயணிகள் ரிஆக்ஷன்
சென்னை சென்டிரலில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 200 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது.. மேலும் தினசரி சராசரியாக 5.3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ஆடியோ அறிவிப்பு முறை இல்லாமல் இருப்பதை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் கூட மற்றொரு தரப்பினர் இதனால் பயணிகள் அவதிப்படுவார்கள் என்று கூறுகின்றனர். அவசரமாக வரும் பயணிகள் போர்டை பார்க்க நேரமிருக்காது. அவர்களால் உதவி மையங்களையும் தேடிச் செல்ல முடியாது. அதுபோன்ற நேரங்களில் ஆடியோ அறிவிப்புகளே சரியானதாக இருக்கும் என்பது அவர்களின் வாதம்.

பார்வை மாற்றுத்திறனாளிகள்
அதேபோல பார்வை மாற்றுத்திறனாளிகள் ரயில் வருகை, புறப்பாடு, தாமதம், குறித்து அறிந்து கொள்ள ஆடியோ அறிவிப்புகளே பயனுள்ளதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் சென்டிரலில் பிரதான நுழைவாயிலில் பிரெய்லி வழி மேப்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் ஏதாவது சிரமத்தை எதிர்கொண்டால் அதையும் தெரிவிக்கலாம் என்றும் அதன் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யவும் தயாராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications